வாரிசு நடிகையின் லிப் லாக் சீன் குறித்து விமர்சனம் செய்த  ஸ்ரீ ரெட்டி 

 

வாரிசு நடிகையின் லிப் லாக் சீன் குறித்து விமர்சனம் செய்த  ஸ்ரீ ரெட்டி 

ஜீவிதா, தனது மகளை லிப்லாப் காட்சிகளில் நடிக்க வைத்தது ஏன்? என நடிகை ஸ்ரீ ரெட்டி கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை: ஜீவிதா, தனது மகளை லிப்லாப் காட்சிகளில் நடிக்க வைத்தது ஏன்? என நடிகை ஸ்ரீ ரெட்டி கேள்வி எழுப்பியுள்ளார்.

தெலுங்கில் வெளியான அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை விஜய் தேவரகொண்டா. அவரின் தம்பி ஆனந்த் தேவரகொண்டா நடிப்பில் வெளியான படம் தொரசானி. இதில் நடிகை ஜீவிதாவின் மகள் ஷிவாத்மிகா நாயகியாக நடித்துள்ளார். அந்த படத்தில் லிப் லாக் காட்சி இடம்பெற்றிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் நடிகை ஸ்ரீ ரெட்டிக்கும், ஜீவி தாவுக்கும் இடையே ஏற்கனவே பிரச்சினை இருந்துள்ளது. முன்பு ஸ்ரீ ரெட்டியின் பேச்சு மற்றும் நிர்வாணப் போராட்டத்தைக் கடுமையாக ஜீவிதா விமர்சனம் செய்திருந்தார். தற்போது அவரை பழி வாங்கும் விதமாக ஜீவி தாவைக் கடுமையாக விமர்சித்துள்ளார் ஸ்ரீ ரெட்டி.

sri reddy

அவரது முக நூல் பக்கத்தில் ‘படத்தில் வரும் லிப்லாக் காட்சி, அந்த சூழலுக்கு ஏற்புடையதாகத் தான் இருக்கிறது. ஆனால் லிப்லாக் முத்தம், செக்ஸ் காட்சிகள் எல்லாம் கூடாது எனக் கூறிய ஜீவிதா தனது மகளை எப்படி அப்படி நடிக்க அனுமதித்தார்? என்று விமர்சனம் செய்துள்ளார்.