வாரிசு அரசியல் எதிர்ப்பு நாடகம் அன்று…வெண் சாமரம் வீச்சு இன்று: வைகோவை வறுத்தெடுத்த தமிழிசை

 

வாரிசு அரசியல் எதிர்ப்பு நாடகம் அன்று…வெண் சாமரம் வீச்சு இன்று: வைகோவை வறுத்தெடுத்த தமிழிசை

பிரதமர் மோடியை விமர்சித்த வைகோவை தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், வாரிசு அரசியல் எதிர்ப்பு நாடகம் அன்று…அரசியல் வாரிசுகளுக்கு வெண் சாமரம் வீச்சு இன்று என விமர்சனம் செய்துள்ளார்.

சென்னை: பிரதமர் மோடியை விமர்சித்த வைகோவை தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், வாரிசு அரசியல் எதிர்ப்பு நாடகம் அன்று…அரசியல் வாரிசுகளுக்கு வெண் சாமரம் வீச்சு இன்று என விமர்சனம் செய்துள்ளார்.

நாட்டுக்கு பிரதமர் மோடி ஒரு சாபக்கேடு எனவும், விதவிதமாக உடை அணிவது, தினம் ஒரு நாட்டிற்கு செல்வது என 2 போதைகளில் இருக்கிறார் எனவும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பிரதமர் மோடியை கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். இதனையடுத்து அவருக்கு பாஜகவினர் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தனது ட்விட்டர் பக்கத்தில், பாரதப்பிரதமர் மோடிஅவர்களை நிதானம் இழந்து தரம் தாழ்ந்து அரசியல் நாகரீகம் இல்லாமல் நாக்கில் நரம்பில்லாமல் நரச நடையில் ஒருமையில் விமர்சிக்கும் வைகோ அவர்களை தமிழக பாஜக கண்டிக்கிறது .கள்ளத்தோணி முதல் ஐயோ கொலைப்பழி போலி நாடகங்களால் தீக்குளித்த மதிமுக தொண்டர்கள் ஆன்மா உங்களை மன்னிக்காது என பதிவிட்டுள்ளார்.

இதேபோல் மற்றொரு ட்வீட்டில், விதவிதமாக உடை மாற்றி தினம் ஒரு நாடு விமானத்தில் மோடி போதையில் செல்வதாக கூறும் கள்ளத்தோணி கட்டுமரங்களே விதவிதமாக விஞ்ஞானபூர்வமாக ஊழல்கள் செய்த கட்சி இலங்கைத்தமிழரை கொன்று குவிக்க துணை நின்ற காங்கிரசுடன் கூட்டணிக்கு காத்திருக்கும் வைகோ இலங்கை தமிழர் பற்றி இனிமேலும் பேசதகுதியில்லை எனவும்

வாரிசு அரசியல் எதிர்ப்பு நாடகம் அன்று…அரசியல் வாரிசுகளுக்கு வெண் சாமரம் வீச்சு இன்று . உண்ட வீட்டுக்கு இரண்டகம் வளர்த்த கிடாய் நெஞ்சு காயம் கள்ளத்தோணி பட்டதாரி கூட்டணி பிச்சை கோரி அறிவாலய வாசலில்  அந்தோ பரிதாபம் என கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.