வாராக்கடன் குறைப்பில் முன்னேற்றம் கண்ட ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி…..

 

வாராக்கடன் குறைப்பில் முன்னேற்றம் கண்ட ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி…..

கடந்த ஜூன் காலாண்டில் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி தனிப்பட்ட முறையில் நிகர லாபமாக ரூ.1,908 கோடி ஈட்டியுள்ளது. மேலும், அந்த வங்கியின் வாராக்கடனும் அளவும் குறைந்துள்ளது.

இந்தியாவின் முன்னணி தனியார் வங்கிகளில் ஒன்றான ஐ.சி.ஐ.சி.ஐ. தனது ஏப்ரல்-ஜூன் காலாண்டு நிதிநிலை முடிவுகளை வெளியிட்டுள்ளது. கடந்த ஜூன் காலாண்டில் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி தனிப்பட்ட முறையில் நிகர லாபமாக ரூ.1,908 கோடி ஈட்டியுள்ளது. சென்ற நிதியாண்டின் இதே காலாண்டில் அந்த வங்கிக்கு ரூ.120 கோடிக்கு இழப்பு ஏற்பட்டு இருந்தது.

ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி

கடந்த ஏப்ரல்-ஜூன் காலாண்டில் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியின் தனிப்பட்ட மொத்த வருவாய் ரூ.21,405.50 கோடியாக உயர்ந்துள்ளது. 2019 ஜூன் இறுதி நிலவரப்படி அந்த வங்கியின் மொத்த வாராக்கடன் 6.49 சதவீதமாக குறைந்தது. 2018 ஜூன் இறுதியில் அந்த வங்கியின் மொத்த வாராக் கடன் 8.81 சதவீதமாக உயர்ந்து இருந்தது. 

ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி

ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி தனது நிதிநிலை முடிவுகளை நேற்று வெளியிட்டது. அந்த வங்கியின் நிதிநிலை முடிவுகள் திருப்திகரமாக இருப்பதால்  வரும் நாட்களில் அந்நிறுவன பங்குகளில் முதலீட்டாளர்கள் முதலீட்டை அதிகரிக்க வாய்ப்புள்ளது.