வாய்ஸ் அசிஸ்டென்ட் வசதி கொண்ட ஸ்மார்ட் ஸ்பீக்கரை அறிமுகம் செய்யுமா சியோமி?

 

வாய்ஸ் அசிஸ்டென்ட் வசதி கொண்ட ஸ்மார்ட் ஸ்பீக்கரை அறிமுகம் செய்யுமா சியோமி?

சியோமி நிறுவனம் புதிய ஸ்மார்ட் ஸ்பீக்கரை விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யும் என்று எதிர்பார்ப்பு நிலவுகிறது.

டெல்லி: சியோமி நிறுவனம் புதிய ஸ்மார்ட் ஸ்பீக்கரை விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யும் என்று எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இந்தியாவில் சியோமி நிறுவனம் ஆடியோ தொடர்பான சாதனம் ஒன்றை நாளை மறுநாள் (பிப்ரவரி 17-ம் தேதி) அறிமுகம் செய்ய வாய்ப்பிருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது. அனேகமாக அது போர்ட்டபிள் ஸ்மார்ட் ஸ்பீக்கராக இருக்கும் என சியோமி வெளியிட்டுள்ள டீசர்களின் மூலம் தெரியவந்துள்ளது.

அந்த டீசர்களுடன் #CarryYourSound எனும் ஹேஷ்டேக் இடம்பெற்று இருப்பதால் இது ஸ்மார்ட் ஸ்பீக்கராக இருக்கும் என்று கருதப்படுகிறது. அத்துடன் டீசரில் உள்ள புகைப்படம் ஸ்பீக்கர் போன்ற உருவம் தென்படுகிறது. அதனால் இந்த புதிய சாதனம் போர்ட்டபிள் ஸ்பீக்கராக இருக்கும் என தெரிகிறது. மேலும் இந்த ஸ்மார்ட் ஸ்பீக்கரில் வாய்ஸ் அசிஸ்டண்ட் வசதி வழங்கப்படலாம் என்று எதிர்பார்ப்பு நிலவுகிறது.