வாய்ப்பைத் தடுத்த சினிமா பெரியவர்கள்… திரை பயணம் பற்றி மனம் திறந்த எம்.எஸ்.வி மருமகள்!

 

வாய்ப்பைத் தடுத்த சினிமா பெரியவர்கள்… திரை பயணம் பற்றி மனம் திறந்த எம்.எஸ்.வி மருமகள்!

குழந்தை நட்சத்திரம், கதாநாயகி, குணச்சித்திரம் என்று கிடைத்த எல்லா வாய்ப்பிலும் சாதித்தவர் நடிகை சுலக்‌ஷனா. சினிமா அறிமுகம் மற்றும் சொந்த வாழ்க்கை பற்றி அவர் சமீபத்தில் மனம் திறந்த பதிவை வெளியிட்டுள்ளார். 

குழந்தை நட்சத்திரம், கதாநாயகி, குணச்சித்திரம் என்று கிடைத்த எல்லா வாய்ப்பிலும் சாதித்தவர் நடிகை சுலக்‌ஷனா. சினிமா அறிமுகம் மற்றும் சொந்த வாழ்க்கை பற்றி அவர் சமீபத்தில் மனம் திறந்த பதிவை வெளியிட்டுள்ளார். 

sulakshana

என்னுடைய சொந்த ஊர் ஆந்திர மாநிலம் ராஜமுந்திரி. என்னுடைய தாத்தா சினிமா பத்திரிகையாளராக இருந்ததால் நான் குழந்தையாக இருக்கும்போதே என் குடும்பம் சென்னைக்கு வந்துவிட்டது. திரை பிரபலங்களை பேட்டி எடுக்கச் செல்லும்போது எல்லாம் என்னையும் என் தாத்தா அழைத்துச் செல்வார். அப்படி ஒரு முறை சென்றபோதுதான் எனக்கு நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

sulakshna

சினிமா ஷூட்டிங்கை நான் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தேன். அப்போது அந்த படத்தில் நடிக்க இருந்த சிறுமிக்கு சரியாக நடிக்க வரவில்லை. இதனால், இயக்குநர் கே.பி சார் என்னை நடிக்க வைத்தார். ஜெமினி கணேசன் – சௌகார் ஜானகிக்கு மகளாக நடித்தேன். அதன்பிறகு குழந்தை நட்சத்திரமாக 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தேன். என்னுடைய நிஜப் பெயர் ஶ்ரீதேவி. அந்த பெயரில் வேறு ஒருவர் பிரபலமாக இருந்ததால் என்னுடைய பெயரை மாற்றி சுபோதயம் என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகம் செய்தார் கே.விஸ்வநாத். அந்த படம் சூப்பர் ஹிட் ஆனது.

sulakshana

அதன் பிறகு கன்னட நடிகர் ராஜ்குமாருக்கு நாயகியாக நடித்தேன். அதுவும் ஹிட். பிறகுதான் தூறல் நின்னு போச்சு பட வாய்ப்பு கிடைத்தது. ஏற்கனவே குழந்தை நட்சத்திரமாக, ஹீரோயின்னாக பல படங்கள் நடித்திருந்தாலும் அறிமுக நடிகைப் போலவே எனக்கு பல டெஸ்ட் எடுக்கப்பட்டது. எல்லாவற்றிலும் ஓ.கே ஆகிவிட்டேன். ஆனாலும் என்னை வைத்து படம் எடுக்க வேண்டாம் என்று பாக்யராஜ் சாருக்கு சினிமா பெரியவர்கள் சிலர் சொல்லியிருக்கிறார்கள்.

sulakshna

அப்போதுதான் பாக்யராஜின் மனைவி பிரவீணா, “இந்த பெண் நன்றாக நடிப்பார். இவரையே வைத்து எடுக்கலாம்” என்று பாக்யராஜிடம் ரெக்கமண்ட் செய்தார். அந்த படமும் ஹிட். இப்படித் தொடர்ந்து படங்களில் நடித்து வந்தபோது திடீரென்று எனக்கு திருமணம் பேசி முடித்தார்கள். பிரபல இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதனின் மகன் கோபி கிருஷ்ணாவுக்கும் எனக்கும் திருமணம் நடந்தது.

msv

திருமணத்துக்குப் பிறகு நிறைய வாய்ப்புகள் வந்தன. பல படங்களில் நடிக்கவும் செய்தேன். இதற்குள்ளாக எனக்கும் கோபி கிருஷ்ணாவுக்கும் ஒத்துப்போகவில்லை என்பதால் விவாகரத்தும் நடந்தது. 
குடும்ப பிரச்னை காரணமாக வாய்ப்பு இன்றி இருந்தேன். கே.பி சாரின் சிந்து பைரவி என்னை நல்ல குணச்சித்திர நடிகர் என்ற இடத்தை அடைய உதவியது. அதன் பிறகு மீண்டும் ஒரு ரவுண்ட் வந்தேன். குடும்ப வாழ்க்கை எதிர்பார்த்த விதத்தில் அமையவில்லை என்றாலும் இப்போதும் நானும் கோபி கிருஷ்ணாவும் நல்ல நண்பர்களாகவே இருக்கிறோம். கோபம், வருத்தம், ஏமாற்றம், விரோதம் என்று எதுவும் இல்லாமல் நல்லவிதமாகப் பிரிந்ததால் நிம்மதியாகவே இருக்கிறேன்

sindhu bairavi

.தனி ஆளாக இருந்து என்னுடைய இரண்டு பிள்ளைகளை நன்கு படிக்க வைத்து அவர்களை பெரிய நிலைமைக்கு ஆளாக்கியுள்ளேன். இத்தனை ஆண்டுகள் சினிமா துறையில் இருந்தும் வளர்ச்சி, புகழ், செல்வாக்கு குறைவாக உள்ள ஆளாக நான் இருக்கலாம். அப்படி இருக்கவே விரும்புகிறேன். அதுவே மன அமைதியை தருகிறது” என்றார்.