வாய்க்கசப்பை மாற்றும் இஞ்சிக் குழம்பு

 

வாய்க்கசப்பை மாற்றும் இஞ்சிக் குழம்பு

இதயத்துக்கு நலம் தரக்கூடிய இஞ்சிக் குழம்பானது வாய்க்கசப்பாக இருக்கும்போது சுவையைக் கூட்டும் தன்மையுடையது.

இதயத்துக்கு நலம் தரக்கூடிய இஞ்சிக் குழம்பானது வாய்க்கசப்பாக இருக்கும்போது சுவையைக் கூட்டும் தன்மையுடையது.

தேவையான பொருட்கள்:

இஞ்சி – 4 அங்குல நீளம்
பச்சை மிளகாய் – 3
புளி – சிறு எலுமிச்சை அளவு
தக்காளி – 1
கடுகு – 1 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – 3 ஸ்பூன்
கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவு.

செய்முறை:

இஞ்சியை தோல் சீவி நறுக்கவும்.  புளி, தக்காளி, பச்சை மிளகாய், கொத்தமல்லி, கருவேப்பிலை, நறுக்கிய இஞ்சி துண்டுகள் இவை எல்லாவற்றையும் போட்டு மிக்சியில் நன்றாக அரைக்கவும். 

அரைத்த விழுதில் முக்கால் கப் தண்ணீர் விட்டுக் கரைத்து உப்பு போட்டு, வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு வெடித்ததும் கரைசலைக் கொட்டிக் கிளறவும்.
 
குழம்பு போல 5 நிமிடங்கள் கொதித்ததும் இறக்கவும்.  தயிர் சாதத்துக்கு தொட்டுக் கொள்வதற்கு மிகவும் ருசியாக இருக்கும்.