வாயில துணியை வச்சிக்கிட்டு தள்ளிப்போய் உட்காருடா… வடிவேலுவின் கலகல பேச்சு!

 

வாயில துணியை வச்சிக்கிட்டு தள்ளிப்போய் உட்காருடா… வடிவேலுவின் கலகல பேச்சு!

மறுநாள் காலையில ஏங்க  விடிஞ்சதும் தானே உங்கள வரச்சொன்னேன் என்று கேட்டார். அதற்கு நான், நீங்க வாய்ப்பு கொடுத்த போதே, எனக்கு விடிஞ்சிடுச்சி என்றேன்.

சென்னை  நேரு உள்விளையாட்டரங்கில் நேற்று நடிகர் கமல் ஹாசனின்  60 கால திரைப்பயணத்தை திரைப்பயணத்தை கொண்டாடும் விதமாக உங்கள் நான் என்ற பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி  நடைபெற்றது.

kamal

இதில் நடிகர் ரஜினிகாந்த், இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான், எஸ்.ஏ.சந்திரசேகர், இயக்குநர் ரஞ்சித், நடிகர் வடிவேலு   உள்ளிட்ட திரை பிரபலங்கள் பலரும்  கலந்து கொண்டார்கள்.

vadivelu

இந்நிலையில்  நிகழ்ச்சியில் பேசிய நடிகர் வடிவேலு, ’60 வருஷமா அவர் எவ்வளவு பேர  பார்த்துருப்பாரு. எத்தனை ஏவுகணைகள் வந்திருக்கும். எத்தனை பாம் போட்டுருப்பாங்க. அதெல்லாம் தாண்டி இங்க வந்து நிக்குறது சும்மாவா? அவர் ஒரு பல்கலைக்கழகம். தேவர் மகன் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பளித்த கமல் ஹாசன், நாளை காலை ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு  வாங்க என்று கூறிவிட்டு போய்விட்டார். நான் முதல் இரவே அங்க போயிட்டேன். மறுநாள் காலையில ஏங்க  விடிஞ்சதும் தானே உங்கள வரச்சொன்னேன் என்று கேட்டார். அதற்கு நான், நீங்க வாய்ப்பு கொடுத்த போதே, எனக்கு விடிஞ்சிடுச்சி என்றேன். ஏன்னா நான்காவது படத்திலேயே கமல், சிவாஜி என மிகப்பெரிய ஜாம்பவான்களின் நடக்கக்கூடிய வாய்ப்பு எனக்கு அவரால் தான் கிடைத்தது. 

தேவன் மகன் படத்துல சிவாஜி சார் செத்துடுவாரு அழணும்… நான் கமல் ஹாசனை விட அதிகமாக அழுதேன். உடனே சிவாஜி சார் எழுந்து,  யார்ரா… இவன் எனக்கென்ன 2 மகனா நீ ஏன்டா இப்படி அழுகுற…? வாயில துணியை வச்சிக்கிட்டு தள்ளிப்போய் உட்காருடா என்று கூறினார். அதற்கு பிறகு என்னை தனியாக அழைத்து, நல்லா மதுரை தமிழ் பேசுறான் என்று கூறி முத்தம் கொடுத்தார். அன்றிலிருந்து தான் நான் நடிக்க கற்றுக்கொண்டேன்’ என்றார்.