வாயின் வாயை கட்டிப் போட்ட டீன் ஏஜ் பையன் – நன்னடத்தை கண்காணிப்பு தண்டனை

 

வாயின் வாயை கட்டிப் போட்ட டீன் ஏஜ் பையன் – நன்னடத்தை கண்காணிப்பு தண்டனை

அமெரிக்காவில் நாயின் வாயை கட்டிப் போட்ட டீன் வயது வாலிபருக்கு நன்னடத்தையை கண்காணிக்கும் தண்டனை வழங்கப்பட்டது.

லீ கவுண்டி: அமெரிக்காவில் நாயின் வாயை கட்டிப் போட்ட டீன் வயது வாலிபருக்கு நன்னடத்தையை கண்காணிக்கும் தண்டனை வழங்கப்பட்டது.

அமெரிக்க நாட்டின் புளோரிடா மாகாணத்தில் லேஹி ஏக்கர்ஸ் என்ற இடத்தில் கடந்த மாதம் சான்ஸ் என்று அழைக்கப்படும் தெருநாய் ஒன்று நாடா துணியால் வாய் கட்டப்பட்டு பரிதாபமாக சுற்றித் திரிந்தது. அதனால் தண்ணீர் கூட குடிக்க வழியின்றி, தொண்டை வறண்டு மூச்சு திணறிய நிலையில் அந்த நாய் இருந்ததை விலங்குநல கட்டுப்பாட்டு அதிகாரிகள் கண்டறிந்தனர். இதையடுத்து நாயின் வாயில் கட்டப்பட்டிருந்த நாடாவை அவிழ்த்து விட்டு தண்ணீர் கொடுத்தனர்.

லீ கவுண்டி ஷெரீப் கேர்மைன் மார்சினோ அந்த நாயை தத்தெடுத்துக் கொண்டார். இதையடுத்து இப்போது அந்த நாய் ஷெரீப் அலுவலகத்தின் சமூக உறவு பிரிவின் ஒரு அங்கமாக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், நாயின் வாயைக் கட்டிப்போட்டது யார் என்று விசாரணை நடத்தப்பட்டது. அதில் ஆஸ்கார் லீ தாம்ப்சன் என்ற 19 வயது வாலிபர் தான் இந்த செயலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவருடைய கைரேகையும், நாயின் வாயில் கட்டப்பட்டிருந்த நாடாவில் பதிவாகி இருந்த கைரேகையும் ஒத்துப் போனதை தடயவியல் நிபுணர்கள் கண்டுபிடித்தனர். இதனால் தாம்சனை குற்றவாளி என உறுதி செய்யப்பட்டு அவருக்கு 5 ஆண்டு காலம் நன்னடத்தை மேற்பார்வையில் வைத்து கண்காணிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.