வாயால் வசமாக மாட்டிக்கொண்ட நித்தியானந்தா: மூலவர் சிலையை திருடியதாக புகார்!

 

வாயால் வசமாக மாட்டிக்கொண்ட நித்தியானந்தா: மூலவர் சிலையை திருடியதாக புகார்!

சூரிய உதயம் 40 நிமிடங்கள் தாமதமாக உதயமாகியது. இதற்குக் காரணம் என்ன தெரியுமா? நான் தியானத்தை முடிக்கும் வரையில் சூரியன் உதிக்கக் கூடாது என்று கட்டளை இட்டது தான்’

பெங்களூரு : சாமியார் நித்தியானந்தா மூலவர் சிலையை திருடிச் சென்றுள்ளதாகப் போலீசில் புகாரளிக்கப்பட்டுள்ளது.

நித்தியானந்தா என்றாலே அவர் சர்ச்சைக்குப் பெயர்போனவர் என்பது பலரும் அறிந்த ஒன்றே. இதனால் இவர் தனது சீடர்களுடன் பேசும் வீடியோக்கள் சமூகவலைதளங்களில்  வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தும். சமீபத்தில்  சீடர்கள் மத்தியில் பேசிய நித்தியானந்தா, தினமும்  சூரிய உதயத்துடன் தான் நாள்  இன்று சூரிய உதயம் தாமதமாக இருந்ததை  எத்தனை பேர் கவனித்தீர்கள்? கேட்டார். இன்று சூரிய உதயம் 40 நிமிடங்கள் தாமதமாக உதயமாகியது. இதற்குக் காரணம் என்ன தெரியுமா? நான் தியானத்தை முடிக்கும் வரையில் சூரியன் உதிக்கக் கூடாது என்று கட்டளை இட்டது தான்’ என்றார். இந்த வீடியோ வைரலானது. 

nithi

இதேபோல் கடந்த சில தினங்களுக்கு முன்பு சீடர்கள்  நித்தியானந்தா பேசிய வீடியோ ஒன்று வெளியானது. அதில்,  மேட்டூர் அணையில் நீர் வற்றினால்  நந்தி சிலை ஒன்று வெளியே தெரியுமே அந்த சிலையைக் கொண்டுள்ள சிவன் கோவிலை நான்தான் போன ஜென்மத்தில் கட்டினேன். அந்த சிவன் கோவிலின் மூலவரான சிவ லிங்கம் தன்னிடம்தான் உள்ளது’ என்றார்]. இந்த பேச்சு சர்ச்சையைக் கிளப்பியது. 

nithi

இந்நிலையில் சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே கொளத்தூர் பாலவாடியை சேர்ந்த  வேலுசாமி, சக்திவேல் னாகிய இருவர் நித்தியானந்தா மீது போலீசில் புகார் கொடுத்தனர். அதில் பாலவாடி ஜலகண்டேசுவரர் ஆலயத்திலிருந்த மூலவர் லிங்கத்தை  நித்தியானந்தா திருடிச் சென்று விட்டார். தாய் மீது தாருங்கள் என்று அந்த புகாரில் கூறியுள்ளனர்.