வானமே எல்லை…. வந்துவிட்டது பறக்கும் கார்! 

 

வானமே எல்லை…. வந்துவிட்டது பறக்கும் கார்! 

அமெரிக்காவைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று 644 கிலோ மீட்டர் தூரம் வரை பயணிக்கக் கூடிய வகையிலான, உலகின் முதல் பறக்கும் காரை வடிவமைத்துள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று 644 கிலோ மீட்டர் தூரம் வரை பயணிக்கக் கூடிய வகையிலான, உலகின் முதல் பறக்கும் காரை வடிவமைத்துள்ளது.

கலிபோர்னியாவின் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களில் ஒன்றான அலகா ஐ டெக்னாலெஜிஸ் நிறுவனம், ஹைட்ரஜன் எரிபொருளில் இயங்கும் இந்த பறக்கும் காரை சமீபத்தில் அறிமுகப்படுத்தியிருக்கிறது. ஸ்கை எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த கார், 5 பேர் அமரக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த காரில் ஒருமுறை எரிபொருளை நிரப்பினால், 644 கிலோ மீட்டர் வரை பயணம் செய்யலாம்.  ஒரு மணிநேரத்திற்கு 150 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் இந்த கார் ஹெலிகாப்டரின் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தயாரிக்கப்பட்டுள்ளது.  இந்த காரின் மொத்த எடை 454 கிலோ ஆகும். 

df

போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காகவும், எரிபொருள் தேவையை பூர்த்தி செய்வதற்காகவும், சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத எரிபொருளை கொண்டு இந்த கார் வடிவமைக்கப்பட்டுள்ளதாக ஸ்டார்ட் அப் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் இதை வாடகை காராகவும், ஆம்புலன்ஸாகவும் மற்றும் அவசரக்கால பயன்பாட்டுக்கும் இதைப் பயன்படுத்தலாம் எனவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.