வானத்தில் ஏதோ ‘சொய்ங்’னு போச்சு… ‘புடிச்சுட்டேன்’! பிரேம்ஜியின் வைரல் விடியோ

 

வானத்தில் ஏதோ ‘சொய்ங்’னு போச்சு… ‘புடிச்சுட்டேன்’! பிரேம்ஜியின் வைரல் விடியோ

பிஎஸ்எல்வி சி 44 ராக்கெட் விண்ணில் சென்றபோது புதிரான முறையில் பிரேம்ஜி அமரன் எடுத்த விடியோ சமுகத் தளங்களில் வைரலாகிறது

சென்னை: பிஎஸ்எல்வி சி 44 ராக்கெட் விண்ணில் சென்றபோது புதிரான முறையில் பிரேம்ஜி அமரன் எடுத்த விடியோ சமுகத் தளங்களில் வைரலாகிறது.

பிஎஸ்எல்வி சி44 ராக்கெட்டை இஸ்ரோ நேற்று இரவு 11.37 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவியது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து இந்த ராக்கெட் ஏவப்பட்டது.

‘இதை யாராவது பார்த்தீர்களா’ என்று கூறி ராக்கெட் செல்லும்போது எடுத்த விடியோவை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார் பிரேம்ஜி அமரன்.

‘அது ஒன்றும் ஸ்பேஸ் ஷிப் இல்லை பிரேம்ஜி. நம்ம இஸ்ரோ ஏவிய ராக்கெட் தான். பயப்பட வேண்டாம். நாங்களும் பார்த்தோம்’ என்று நெட்டிசன்கள் பிரேம்ஜியிடம் தெரிவித்துள்ளனர்.

‘மது அருந்திவிட்டு ஏதாவது சொல்லாமல் போய் படுத்து தூங்குங்கள்’ என்று சிலர் பிரேம்ஜி அமரனை கலாய்த்துள்ளனர். ‘தண்ணி அடித்துவிட்டு ராக்கெட்டை பார்த்து பயப்பட வேண்டாம்’ என்று கூறியுள்ளனர்.

பிரேம்ஜியிடம் ஏதாவது கேள்வி கேட்டால் ஜாலியாக பதில் சொல்வார். இந்நிலையில் தான் அவர் வெளியிட்ட விடியோவை பார்த்துவிட்டு நெட்டிசன் ஒருவர் கிண்டலாக பதில் அளித்துள்ளார்.