வாத்துக் கறி… பலாப்பிஞ்சு… இந்த காம்பினேஷன் சாப்பிட்டிருக்கீங்களா!

 

வாத்துக் கறி… பலாப்பிஞ்சு… இந்த காம்பினேஷன் சாப்பிட்டிருக்கீங்களா!

பொதுவாக தென் தமிழகத்தில்,உருளைக்கிழங்கை கறிக்குழம்பில் சேர்ப்பார்கள். கத்தரிக்காயை மீன் அல்லது கருவாட்டுக் குழம்பில் போடுவதுண்டு.பலாக்காய்  முற்றி அதனுள் விதைகள் உருவாகும் முன் அதை சமைப்பார்கள்.கிட்டத்தட்ட கறியின் சுவையுடன் இருக்கும் அந்த பலாக்கறியை வாத்துக்கறியுடன் சேர்த்து சமைக்கப்போகிறோம்

பொதுவாக தென் தமிழகத்தில்,உருளைக்கிழங்கை கறிக்குழம்பில் சேர்ப்பார்கள். கத்தரிக்காயை மீன் அல்லது கருவாட்டுக் குழம்பில் போடுவதுண்டு.பலாக்காய்  முற்றி அதனுள் விதைகள் உருவாகும் முன் அதை சமைப்பார்கள்.கிட்டத்தட்ட கறியின் சுவையுடன் இருக்கும் அந்த பலாக்கறியை வாத்துக்கறியுடன் சேர்த்து சமைக்கப்போகிறோம் .

தேவையான பொருட்கள்.

duck roast

வாத்து இறைச்சி 1 கிலோ
பலாப்பிஞ்சு 1
பெரிய வெங்காயம் 1
தக்காளி 2
பிரிஞ்சி இலை,பட்டை
சோம்பு ½ ஸ்பூன்

வறுத்து அரைக்க

சின்ன வெங்காயம் ½ கிலோ
தக்காளி 2
இஞ்சி 2 இஞ்ச் துண்டு
பூண்டு 10 பல்
காய்ந்த மிளகாய் 10
கொத்தமல்லி விதை 2 ஸ்பூன்
மிளகு 2 ஸ்பூன்
எண்ணெய் 2 குழிக்கரண்டி

எப்படிச் செய்வது.

jack fruit

முதலில் வறுக்க கொடுத்துள்ள பொருட்களை ஒரு குழிக்கரண்டி எண்ணெயில் வறுத்து ஆறவைத்து அரைத்து எடுக்கவும்.பலாக்காயை தோல் சீவி சிறிய துண்டுகளாக வெட்டி வையுங்கள்.வாத்துக்கறியை அரைத்த மசாலா விழுதில் சேர்த்துப் பிசைந்து ,கொஞ்சம் உப்புத்தூளும் சேர்த்து ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.

சமைக்கும் முறை!

ஒரு குக்கரை அடுப்பில் வைத்து,எண்ணெய் ஊற்றி,சோம்பு ,பிறிஞ்சி இலை,பட்டை கிராம்பு போட்டு தாளியுங்கள்.( பிடிக்குமானால் இரண்டு பச்சை மிளகாய்களை உடைத்துப் போடலாம்) வெங்காயம் தக்காளியை வெட்டிப் போட்டு சிறிது உப்புச்சேர்த்து வதக்குங்கள்.இரண்டு நிமிடம் கழித்து வெட்டி வைத்துள்ள பலாக்காய் துண்டுகளை சேர்த்து மேலும் இரண்டு நிமிடம் வதக்கிய பிறகு,மசாலாவில் ஊறவைத்து இருக்கும் வாத்துக் கறியை குக்கரில் போட்டு,கறி ஊறிய பாத்திரத்தில் இரண்டு கப் தண்ணீர் ஊற்றி கழுவி அதையும் குக்கரில்  ஊற்றி மூடியை போட்டு ஒரு விசில் விடும் வரை அருகில் இருங்கள். விசில் வந்ததும் அடுப்பை சிம்மில் வைத்து ஏழு நிமிடம் கழித்து அடுப்பை அனையுங்கள்.எது வாத்துக்கறி,எது பலாக்காய் என்று உங்களால் கண்டுபிடிக்கவே முடியாது,சோறு,இட்லி இரண்டுக்குமே சிறப்பான பக்கவாத்தியமாக இருக்கும்.