வாணியம்பாடி காவல் நிலையத்துக்கு சீல்… பெண் ஆய்வாளருக்கு கொரோனா பரவியதால் நடவடிக்கை!

 

வாணியம்பாடி காவல் நிலையத்துக்கு சீல்… பெண் ஆய்வாளருக்கு கொரோனா பரவியதால் நடவடிக்கை!

அவர்களுக்கு முறையான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படவில்லை என புகார் எழுந்த வண்ணம் உள்ளது. 

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்று காலை  1596 ஆக இருந்த நிலையில், புதிதாக மேலும் 33 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. அதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1629 ஆக உயர்ந்துள்ளது. மருத்துவர்கள், காவலர்கள், சுகாதாரத் துறையினர், துப்புரவு பணியாளர்கள் என ஆயிரக் கணக்கான மக்கள் கொரோன தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு முறையான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படவில்லை என புகார் எழுந்த வண்ணம் உள்ளது. 

ttn

மின்னல் வேகத்தில் பரவி வரும் இந்த கொரோனா வைரஸ், கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கும் பரவி வருவது, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே . தமிழகத்தில் 10க்கும் மேற்பட்ட மருத்துவர்கள்,செவிலியர்கள் மற்றும் காவலர்களுக்கு கொரோனா பரவியுள்ள நிலையில் தற்போது மீண்டும் ஒரு காவலருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 

வாணியம்பாடி கிராமிய காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் பெண் ஆய்வாளருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால், காவல் நிலையத்திற்கு சீல் வைக்கப்பட்டு அங்கு பணி புரியும் காவலர்கள் தனிமைப் படுத்த பட்டுள்ளனர்.