வாட்ஸ் ஆப்-ல் வங்கி சேவையைத் தொடங்கிய ஐ.சி.ஐ.சி.ஐ!

 

வாட்ஸ் ஆப்-ல் வங்கி சேவையைத் தொடங்கிய ஐ.சி.ஐ.சி.ஐ!

எல்லா வங்கிகளும் மொபைல் ஆப் வைத்துள்ளன. இருப்பினும் எல்லோருக்கும் இந்த ஆப் பயன்படுத்தி பண பரிவர்த்தனை செய்யத் தெரியவில்லை. ஆனால், வாட்ஸ் ஆப் மூலம் வங்கி சேயை பெறும் திட்டத்தை ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி தொடங்கியுள்ளது.

கொரோனா பாதிப்பு காரணமாக மக்களின் வாழ்க்கை முடங்கியுள்ள இந்த நேரத்தில் தன்னுடைய வங்கி சேவையை வாட்ஸ் ஆப் மூலம் தொடங்கியுள்ளது ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி.
எல்லா வங்கிகளும் மொபைல் ஆப் வைத்துள்ளன. இருப்பினும் எல்லோருக்கும் இந்த ஆப் பயன்படுத்தி பண பரிவர்த்தனை செய்யத் தெரியவில்லை. ஆனால், வாட்ஸ் ஆப் மூலம் வங்கி சேயை பெறும் திட்டத்தை ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி தொடங்கியுள்ளது. இதன் மூலம் வாட்ஸ் ஆப்பில் தகவல் அனுப்பினால் அவர்களின் வங்கிக் கணக்கில் உள்ள இருப்பு தொகை, கடைசி மூன்று பரிவர்த்தனைகள், முன்பு அங்கீகரிக்கப்பட்ட உடனடி கடன் சலுகை உள்ளிட்ட விவரங்களை பெற முடியும்.

icici

மேலும் வாட்ஸ் ஆப் மூலம் தகவல் அனுப்பி தங்களுடைய டெபிட், கிரெடிட் கார்டுகளை பிளாக், அன்பிளாக் செய்யும் வசதியும் வழங்கப்படுகிறது. இது தவிர அருகில் எங்கே ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி உள்ளது, ஏ.டி.எம் மையம் உள்ளது என்ற விவரத்தையும் வாடிக்கையாளர்கள் பெற முடியும்.