வாட்ஸ் ஆப் செயலி முடக்கப்படலாம் – பயனர்கள் உஷார் !

 

வாட்ஸ் ஆப் செயலி முடக்கப்படலாம் – பயனர்கள் உஷார் !

போலி செயலிகளைப் பயன்படுத்தும் பயனர்களின் செயலிகள் முடக்கப்படலாம் என வாட்ஸ் ஆப் நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

பாதுகாப்பற்ற, மூன்றாம் நிலை  செயலிகளை பயன்படுத்தும் பயனர்களின் செயலிகள் முடக்கப்படலாம் என வாட்ஸ் ஆப் நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

போலி வாட்ஸ் ஆப் செயலிகள் 

சமூக வலைதளங்களின் வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. அதிலும் வாட்ஸ் ஆப் செயலி  உலகம் முழுவதும் பில்லியன் கணக்கான பயனர்களைக் கொண்டுள்ளது.  அதே நேரத்தில் உடனடி செய்திகளை பரிமாறப் பயன்படும் செயலியான வாட்ஸ் அப்பின் பெயரில் சில போலியான செயலிகள் பரவி வருகின்றன. அவற்றைப்  பதிவிறக்கம் செய்யும் பயனர்களின் எண்ணிக்கையும் வேகமாக வளர்ந்து வருகிறது. 

இந்தப் போலி செயலியை பதிவிறக்கம் செய்தவர்களை வாட்ஸ்-ஆப் நிறுவனம் கடுமையாக எச்சரித்து உள்ளது. இத்தகைய செயலிகளைப் பயன்படுத்துவதை நிறுத்தவும். சீக்கிரம் பயனாளிகள் தங்கள் கணக்குகளை உண்மையான வாட்ஸ் ஆப் செயலிக்கு மாற்றி விடுங்கள் எனவும் கேட்டுக் கொண்டு உள்ளது. ஒருவேளை  பயனாளர்கள் இதைச் செய்யாவிட்டால், அவர்களுயுடைய கணக்கு நிரந்தரமாக முடக்கப்படும்  எனவும் எச்சரித்துள்ளது.

fake whatsapp

பயனர்களின் தரவுகளுக்கு பாதுகாப்பில்லை 

முக்கியமாக  இரண்டு போலி செயலிகள் பரவலான பயன்பாட்டில் இருந்து வருகின்றன. அவை,  GB Whatsapp மற்றும் Whatsapp Plus ஆகியன ஆகும்.  இப்படியான போலி செயலிகளை பயன்படுத்துவது மிகவும் ஆபத்தானது. தனிநபர் தொடர்பான தகவல்கள் திருடப்படலாம். அவருடைய தனிப்பட்ட விவரங்கள், புகைப்படங்கள், வீடியோக்கள் ஆகியவற்றை மூன்றாம் நபர்கள் கையாளலாம். எனவே உடனடியாக உண்மையான வாட்ஸ்- அப் செயலிக்குமாறிக் கொள்ளுங்கள் என வாட்ஸ் ஆப் நிறுவனம் அறிவுறுத்தி உள்ளது. செயலிகளில் உண்மையான வாட்ஸ் அப் செயலி பின்பற்றும் சட்டங்களை மூன்றாம் நிலை வாட்ஸ் அப் செயலிகள் பின்பற்றுவது இல்லை. இதனால் பயனர்களின் தரவுகள் திருடப்பட்டு, அது ஆபத்தில் முடியலாம்.