வாட்ஸ் – ஆப்பில் தவறான தகவல் பரப்புபவர்கள் விவரம் வேண்டும்: வாட்ஸ் – ஆப் நிறுவனத்திடம் மத்திய அரசு வலியுறுத்தல்

 

வாட்ஸ் – ஆப்பில் தவறான தகவல் பரப்புபவர்கள் விவரம் வேண்டும்: வாட்ஸ் – ஆப் நிறுவனத்திடம் மத்திய அரசு வலியுறுத்தல்

வாட்ஸ் – ஆப்பில் தவறான தகவல் பரப்புபவர்களின் விவரத்தை அளிக்க வேண்டும் என அந்நிறுவனத்திடம் மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.

டெல்லி: வாட்ஸ் – ஆப்பில் தவறான தகவல் பரப்புபவர்களின் விவரத்தை அளிக்க வேண்டும் என அந்நிறுவனத்திடம் மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.

உலகம் முழுவதும் இருக்கும் மக்களில் பெரும்பாலனோர் வாட்ஸ் – அப் பயன்படுத்தி வருகின்றனர். அதில் ஏராளமான தகவல்கள் பகிரப்பட்டு வருகின்றன. இதனால் பல்வேறு பயன்கள் நடைபெற்று வருகின்றன. அதேசமயம் சிலரால் பரப்பப்படும் தவறான தகவல்கள் காரணமாக அசம்பாவிதங்களும் அரங்கேறி வருகின்றன. குறிப்பாக இந்தியாவில் அண்மைக்காலமாக வாட்ஸ் – அப்பில் பரப்பப்படும் தவறான தகவல்கள் காரணமாக பலர் கடுமையாக தாக்கப்பட்டனர். அதில் சிலர் உயிரிழக்கவும் செய்தனர். 

இந்நிலையில், இந்தியா வந்துள்ள, வாட்ஸ் – ஆப் நிறுவனத்தின் துணை தலைவர், கிறிஸ் டேனியல்ஸ், மத்திய தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்தை சந்தித்தார். 

இந்த சந்திப்பு குறித்து, அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறுகையில், தவறான தகவல்கள் மூலம் ஏற்பட்ட பிரச்னைகளை பற்றி, அந்நிறுவனத்தின் துணை தலைவர் கிறிஸ் டேனியல்ஸ் மற்றும் அவரது குழுவினருடன் விவாதித்தேன். இந்த விவகாரத்தில், இந்தியாவுக்கு என தனியாக குறைதீர் அதிகாரியை நியமிக்க இருப்பதாக தெரிவித்தனர். தவறான தகவல்களை பரப்புவோரின் அடையாளம் மற்றும் இருப்பிடம் குறித்த தகவல்களை, அரசுக்கு தெரிவிக்கும்படியும் வலியுறுத்தினேன். இது குறித்து, தங்கள் தொழில்நுட்ப குழுவுடன் ஆலோசித்து, பின் பதில் அளிப்பதாக, அவர் தெரிவித்தார் என்றார்.