வாட்ஸ் அப் வீடியோகால் மூலம் பிரசவம் பார்த்த பயிற்சி மருத்துவர்கள்: ஆபத்தான கட்டத்திற்கு சென்ற பச்சிளம் குழந்தை!?

 

வாட்ஸ் அப்  வீடியோகால் மூலம் பிரசவம் பார்த்த பயிற்சி மருத்துவர்கள்:  ஆபத்தான கட்டத்திற்கு சென்ற பச்சிளம் குழந்தை!?

வாட்ஸ் அப் வீடியோ காலிங் மூலம் மருத்துவர்கள் பிரசவம் பார்த்ததாகக் கூறி தனியார் மருத்துவமனையைப் பெண்ணின் உறவினர்கள்  முற்றுகையிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கோவை: வாட்ஸ் அப் வீடியோ காலிங் மூலம் மருத்துவர்கள் பிரசவம் பார்த்ததாகக் கூறி தனியார் மருத்துவமனையைப் பெண்ணின் உறவினர்கள்  முற்றுகையிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கோவையைச் சேர்ந்தவர் ரங்கராஜ். இவரது மனைவி நித்யா. நித்யா கருத்தரித்ததால், கடந்த அக்டோபர் மாதம் முதல் புலியகுளம் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில்  சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 3ஆம் தேதி நித்யா பிரசவத்திற்காக அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

preg

ஆனால்  அந்த நேரத்தில் மருத்துவமனையில் மருத்துவர் இன்றி உரிய பயிற்சியில்லாத உதவி மருத்துவர்கள் மட்டுமே இருந்துள்ளதாகக் கூறப்படுகிறது. அவர்கள் வாட்ஸ் அப்பில்  நித்யாவின் புகைப்படங்களை அனுப்பியதோடு,  வாட்ஸ் அப் வீடியோ கால் மூலம் தகவல்களைப் பெற்று சிகிச்சை அளித்ததாகத் தெரிகிறது. இதையடுத்து அவருக்குப் பெண் குழந்தை பிறந்துள்ளது.

abor

இருப்பினும் குழந்தைக்கு உடல்நிலை மோசமானதாகத் தெரிகிறது. இதனால் குழந்தையை உடனடியாக அருகில் உள்ள வேறொரு மருத்துவமனையில் ரங்கராஜ் அனுமதித்துள்ளார். அங்கேயும் மருத்துவர்கள் குழந்தை மோசமான கட்டத்தில் இருப்பதாகக் கூறியுள்ளனர்.  இதனால் ஆத்திரமடைந்த நித்யாவின் உறவினர்கள், கோவை ராமநாதபுரம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

whatsapp

இதையடுத்து போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்காததால், மருத்துவமனை முன்பு உறவினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு  வந்த போலீசார், அவர்களை உரிய நடவடிக்கை எடுப்பதாகக் கூறி சமாதானம் செய்தனர். 

ciombatore

இது குறித்து தனியார் மருத்துவர்கள் தரப்போ,  வாட்ஸ் அப்  மூலம் பிரசவம் நடந்ததாகக் கூறுவது தவறு. பிரசவத்தின் போது நஞ்சுக்கொடி உரிய முறையில் பிரியாததால் தான்,  குழந்தையின் உடல்நிலை பாதிக்கப்பட்டது என்று விளக்கமளித்துள்ளனர்.