வாட்ஸ் அப் சாட், புகைப்படங்கள் திருடப்படும்? அச்சுறுத்தும் ஹேக்கர்கள்

 

வாட்ஸ் அப் சாட், புகைப்படங்கள் திருடப்படும்? அச்சுறுத்தும் ஹேக்கர்கள்

வாட்ஸ் அப்பில் ஹேக்கர்கள் ஊடுருவ முயற்சிப்பதால் உடனடியாக செல்போனில் உள்ள வாட்ஸ் அப் செயலியை அப்டேட் செய்யுமாறு அந்நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.  ‌

வாட்ஸ் அப்பில் ஹேக்கர்கள் ஊடுருவ முயற்சிப்பதால் உடனடியாக செல்போனில் உள்ள வாட்ஸ் அப் செயலியை அப்டேட் செய்யுமாறு அந்நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.  ‌

உலகம் முழுவதும் பல கோடி மக்களால் பயன்படுத்தப்படும் வாட்ஸ் அப் செயலி மூலம் தினமும் ஏராளமான குறுஞ்செய்திகள், வீடியோ, ஆடியோ மற்றும் புகைப்படங்கள் அனுப்பபடுகின்றன. அந்தளவு வாட்ஸ் அப்பின் ஆதிக்கம் அதிகரித்துள்ள நிலையில், வாட்ஸ் அப்பில் ஹேக்கர்கள் ஊடுருவ முயற்சிப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. குறிப்பா‌க சில பயனர்களை மட்டும் குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்படுகிறது. ஹேக் செய்யப்படவேண்டிய நபரின் செல்போனில் குறிப்பிட்ட சாப்ட்வேர் தானாகவே இன்ஸ்டால் செய்யப்படுவதாக எச்சரித்துள்ளது.

Hackers

இதன்மூலம் செல்போனில் உள்ள தகவல்கள் ஹேக்கர்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும் என கூறப்படுகிறது. இதனால் பயனர்கள் அனைவரும் உடனடியாக வாட்ஸ் அப்பை அப்டேட் செய்யக்கோரி அந்நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது. புதிய வாட்ஸ் அப் அப்டேட்டில் பாதுகாப்பு அம்சங்கள் அதிகம் உள்ளதாகவும் வாட்ஸ் அப் நிறுவனம் தெரிவித்துள்ளது. குறிப்பிட்ட போன் நம்பர்களிலிருந்தோ, சமூக வலைதளங்கள் மூலமாகவோ அல்லது நண்பர்களிடமிருந்தோ வரும் எந்த லிங்கையும் பயன்படுத்தி எந்தஒரு செயலியையும் டவுன்லோடு செய்ய வேண்டாம் என சைபர் நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.