வாட்ஸ் அப்பை ஹேக் செய்யும் பிசாசு… இல்ல இல்ல பிகாசு இதுதானா!

 

வாட்ஸ் அப்பை ஹேக் செய்யும் பிசாசு… இல்ல இல்ல பிகாசு இதுதானா!

சில நாட்களுக்கு முன் வாட்ஸ் அப்பில் அனுப்பப்படும் தகவல்கள் ஹேக் செய்யப்படுவதாகவும், அதனால் வாட்ஸ் அப் செயலியை உடனடியாக அப்டேட் செய்யும் படியின் பயனர்களை அறிவுறுத்தியது.

சில நாட்களுக்கு முன் வாட்ஸ் அப்பில் அனுப்பப்படும் தகவல்கள் ஹேக் செய்யப்படுவதாகவும், அதனால் வாட்ஸ் அப் செயலியை உடனடியாக அப்டேட் செய்யும் படியின் பயனர்களை அறிவுறுத்தியது. இந்நிலையில் தற்போது எவ்வாறு தகவல்கள் ஹேக் செய்யப்படுகின்றன. அதற்கு காரணம் யார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதற்கு பிகாஸுஸ் (PEGASUS) என்ற ஸ்பைவேரே காரணம் என வாட்ஸ் அப் நிறுவனம் கண்டறிந்துள்ளது. 

Whats app

PEGASUS என்ற SPYWARE அண்மையில் செல்போன் பயனர்களின் தரவுகளை திருடுவதற்காகவே உருவாக்கப்பட்ட வைரஸ் என்றும், தற்போது அது பல மொபைல்களில்  பரப்பப்பட்டதாக வாட்ஸ் அப் நிறுவனம் கூறியுள்ளது. பிகாசுஸ், போன் கால்கள் மூலம் பயனர்களின் செல்போன்களில் தானாகவே பதிவிறக்கம் செய்யப்படுகிறது. பின்னர் பயனரின் அனுமதியின்றி கேமரா, மைக், ஆகியவை தானாக செயல்பட்டு பயனரின் தரவுகள் ஹேக்கருக்கு அனுப்பப்படுகிறது. பிகாசுஸ், பயனர்களின் குறுஞ்செய்திகள் மற்றும் இ-மெயில்களை ஹேக்கர்களுக்கு அனுப்பும் திறன் கொண்டது எனவும் கூறப்படுகிறது.

photo

இந்நிலையில் பேஸ் புக் நிறுவனத்தின் கிளை நிறுவனமான வாட்ஸ் அப்  வெளியிட்டுள்ள அறிக்கையில், பயனர்கள் உடனடியாக வாட்ஸ் அப் செயலியை அப்டேட் செய்ய வேண்டுமென கூறியுள்ளது. மேலும் பயனர்கள் தாங்கள் செல்போன்களின் பயன்படுத்தும் ஓஎஸ் என்படும் இயங்கு தளத்தையும் அப்டேட் செய்து பிகாசுஸ் வைரஸிலிருந்து காத்துக் கொள்ள அறிவுரை வழங்கி உள்ளது. 

இம்மாதத் தொடக்கத்தில், பிகாசுஸ் வைரஸ் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த மனித உரிமை ஆர்வலரின் செல்போனை ஊடுருவிய போது முதல் முதலாக கண்டறியப்பட்டது. பிகாசுஸ் வைரஸ் மூலம் பாதிக்கப்பட்ட பயனர்கள் குறித்த தகவல்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.