வாட்ஸ் அப்பில் ப்ளஸ் டூ வினாத்தாள்-நாலாயிரத்துக்குக்கு நாலு கேள்விகள் – வெளியிட திட்டம் போட்ட தேர்வு துறை அதிகாரி… 

வாட்ஸ் அப்பில் ப்ளஸ் டூ வினாத்தாள்-நாலாயிரத்துக்குக்கு நாலு கேள்விகள் – வெளியிட திட்டம் போட்ட தேர்வு துறை அதிகாரி… 

உத்தரபிரதேச வாரிய தேர்வு மையத்தின் மேலாளரும் அவரது மகனும் கைது செய்யப்பட்டனர்.
அவர்களை  ஞாயிற்றுக்கிழமை கைது செய்த சிறப்பு போலீஸ் அவர்களிடமிருந்து  மூன்று மொபைல் போன்கள்,பணம்,ஐந்து வாட்ஸ்அப் அரட்டைகளின் ஸ்கிரீன் ஷாட்கள் மற்றும் பல மோசடியான  விடைத்தாள்களையும் மீட்டுள்ளது.

உ.பி. யில் பிரயாகராஜ் மாவட்டத்தின் டிரான்ஸ்-யமுனா பகுதியில் தேர்வு  மோசடி நடத்தியதாக உத்தரபிரதேச வாரிய தேர்வு மையத்தின் மேலாளரும் அவரது மகனும் கைது செய்யப்பட்டனர்.
அவர்களை  ஞாயிற்றுக்கிழமை கைது செய்த சிறப்பு போலீஸ் அவர்களிடமிருந்து  மூன்று மொபைல் போன்கள்,பணம்,ஐந்து வாட்ஸ்அப் அரட்டைகளின் ஸ்கிரீன் ஷாட்கள் மற்றும் பல மோசடியான  விடைத்தாள்களையும் மீட்டுள்ளது.

இந்திராபன் சிங், ஆஷிஷ் சிங் மற்றும் விகாஸ் யாதவ்,ஆகிய குற்றவாளிகள்  மேஜாவில் வசிப்பவர்கள் எனவும்,அவர்கள் ஒவ்வொரு நாலு கேள்விக்கும்  4000 ரூபாய் வசூலித்து மோசடி செய்துள்ளனர்.

utter pradesh board

இந்திரபன் சிங் தேர்வு மையத்தின் முதன்மை மற்றும் மைய மேலாளராகவும்,அவரது மகன் ஆஷிஷ் கணினி ஆசிரியராகவும்,விகாஸ் ஒரு பணியாளராகவும்  இருந்தார்.
12 ஆம் வகுப்பின் பரீட்சை முடிந்ததும் கணிதத்தின்  விடைத்தாள்களில் மோசடி செய்ய  அவர்கள்   திட்டமிட்டனர்.சனிக்கிழமை பிற்பகல் செங்கல் சூளை அருகே விகாஸ் 12 ஆம் வகுப்பு கணிதத் தேர்வின் கேள்விகளைத் வெளியிட்ட போது  கைது செய்யப்பட்டார்.
12-ஆம் வகுப்பு வாரிய தேர்வுகளின் வினாத்தாள்களை வாட்ஸ்அப் மூலம்  அனுப்ப இருந்ததாக  தந்தையும் -மகனும்  போலீசாரிடம் தெரிவித்தனர்.அனைத்து பாடங்களின்  வினாத்தாள்களின் நகல்களை வழங்க அவர்கள் இருவரும்  ரூ .35,000 முதல் ரூ .40,000 வரை வசூலிப்பார்கள்.