வாட்ஸ் அப்பில் அறிமுகமாகும் தல-தளபதி: ரசிகர்கள் குஷி!

 

வாட்ஸ் அப்பில் அறிமுகமாகும் தல-தளபதி: ரசிகர்கள் குஷி!

இனி ஆண்ட்ராய்ட் போன்களில் வாட்ஸ் அப் மூலம் சேட்டிங் செய்வதுடன் விதவிதமான ஸ்டிக்கர்ஸ்களையும் பயன்படுத்தும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இனி ஆண்ட்ராய்ட் போன்களில் வாட்ஸ் அப் மூலம் சேட்டிங் செய்வதுடன் விதவிதமான ஸ்டிக்கர்ஸ்களையும் பயன்படுத்தும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

கடந்த சில மாதங்களாக எதிர்ப்பார்க்கப்பட்ட இந்த வசதி தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பயனாளிகள் தங்களுக்கு விருப்பமான ஸ்டிக்கர்களை டவுன்லோட் செய்து கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வாட்ஸ் அப்பில் 12 ஸ்டிக்கர் பேக்ஸ்கள் இலவசமாக கொடுக்கப்படுகின்றன. அதற்கு மேல் தேவை எனும் பட்சத்தில் கூகுள் ப்ளேஸ்டோரில் இருந்து டவுன்லோட் செய்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாட்ஸ் அப்பில் சேட்டிங் மட்டுமின்றி விதவிதமான இமோஜிக்களை பரிமாறிக் கொள்வதில் பயனர்கள் அதிகம் ஆர்வம் செலுத்துவர். தற்போது சற்று கூடுதலாக ஸ்டிக்கர்ஸ் வசதியை வாட்ஸ் அப் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

sarkar

சமீபகாலமாக ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் பிரபலங்களின் மிகவும் எதிர்ப்பார்க்கப்படும் திரைப்படங்களுக்கு இமொஜிக்கள் வழங்கப்படுவது வழக்கம். ஆனால் இம்முறை சற்று வித்தியாசமாக வாட்ஸ் அப்பில் அறிமுகமாகவுள்ள ஸ்டிக்கர்ஸ் வசதி மூலம் தமிழில் தளபதி விஜய் நடித்துள்ள ‘சர்கார்’ ஸ்டில்ஸும், தல அஜித்தின் ஸ்டில்ஸும் அறிமுகமாகவுள்ளது. இதனை தல-தளபதி ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.