வாட்ஸ் அப்பில் அதிக முறை ஃபார்வர்டு ஆன தகவலை 5 பேருக்கு பதில் இனி ஒருவருக்கு மட்டுமே அனுப்ப முடியும்!

 

வாட்ஸ் அப்பில் அதிக முறை ஃபார்வர்டு ஆன தகவலை 5 பேருக்கு பதில் இனி ஒருவருக்கு மட்டுமே அனுப்ப முடியும்!

வாட்ஸ் அப்பில் மற்றவர்களுக்கு தகவல்களை பகிர புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. 

கொரோனா குறித்த வதந்திகள் பரவுவதை தடுக்கும் வகையில், அதிக அளவில் பகிரப்படும் செய்திகளை கட்டுப்படுத்த வாட்ஸ் அப் நிறுவனம் முடிவு செய்துள்ளது. அதிக அளவில் பகிரப்படும் செய்திகளை தற்போது 5 நபர்கள் அல்லது குழுக்களுக்கு ஒரேநேரத்தில் பார்வர்ட் செய்ய முடியும். இதை ஒன்றாக குறைக்க வாட்ஸ் அப் நிறுவனம் முடிவு செய்துள்ளது. ஒரு செய்தியை மற்றவர்களுக்கு பகிரும் போது இரண்டு Arrow-க்கள் வந்தால் அது அதிக அளவில் பகிரப்பட்ட செய்தி என அறிந்து கொள்ளலாம்.

whatsapp

இதுதவிர, ஒரு செய்தியை மற்றவர்களுக்கு பகிரும்போது, அதன் உண்மை தன்மையை அறிந்து கொள்ளும் வசதியையும் வாட்ஸ் அப் நிறுவனம் செயல்படுத்த உள்ளது. அதாவது, ஒரு செய்தியை பார்வர்டு செய்யும் போது அதில் வரும் Lenz Icon மூலம், இணையத்துக்கு சென்று செய்தியை உறுதி செய்து கொள்ளலாம்.