வாட்ஸ்அப் பயனாளியா நீங்கள்? இதை செய்து உங்களது தகவல்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுங்கள்

 

வாட்ஸ்அப் பயனாளியா நீங்கள்? இதை செய்து உங்களது தகவல்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுங்கள்

வாட்ஸ்அப் நிறுவனம் பயனாளிகளின் தகவல்கள் பாதுகாப்பிற்காக புதிய வசதி ஒன்றை அப்டேட் மூலம் செய்திருக்கிறது.

வாட்ஸ்அப் பயனாளியா நீங்கள்? இதை செய்து உங்களது தகவல்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுங்கள்

கையில் ஸ்மார்ட்போன் வைத்திருக்கும் ஒவ்வொருவரும் வாட்ஸ் அப் செயலியை தவறாமல் பயன்படுத்திக் கொண்டிருப்பவர்கள் தான். அண்மையில் பாதுகாப்பற்ற முறையில் இருக்கும் வாட்ஸ் அப் பயனாளிகளின் தகவல்கள் ஹேக்கர்கள் மூலம் திருடப்பட்டதை அனைவரும் செய்திகள் மூலம் அறிந்திருப்போம்.

வாட்ஸ்அப் நிறுவனம் பயனாளிகளின் தகவல்கள் பாதுகாப்பிற்காக புதிய வசதி ஒன்றை அப்டேட் மூலம் செய்திருக்கிறது.

கையில் ஸ்மார்ட்போன் வைத்திருக்கும் ஒவ்வொருவரும் வாட்ஸ் அப் செயலியை தவறாமல் பயன்படுத்திக் கொண்டிருப்பவர்கள் தான். அண்மையில் பாதுகாப்பற்ற முறையில் இருக்கும் வாட்ஸ் அப் பயனாளிகளின் தகவல்கள் ஹேக்கர்கள் மூலம் திருடப்பட்டதை அனைவரும் செய்திகள் மூலம் அறிந்திருப்போம். ஆனால் அதை எவ்வாறு தடுப்பது என்பது குறித்து விழிப்புணர்வு அனைவரிடமும் இருக்கிறதா? என்பது கேள்விக்குறி தான்.

ஆதலால் இயல்பாகவே பாதுகாப்பான முறையில் தகவல்களை வைத்துக் கொள்ள வாட்ஸ்அப் நிறுவனம் தினமும் ஏதேனும் ஒரு அப்டேட் கொடுத்துக் கொண்டே இருக்கிறது. ஆனால் பயனாளிகள் அதைப் பற்றி புரிந்து கொள்ளாமல் அசால்டாக பின்பு அப்டேட் செய்து கொள்ளலாம் என நகர்கின்றனர். 

தற்போது மேலும் ஒரு புதிய வசதி ஒன்றை அப்டேட் மூலம் வாட்ஸ்ஆப் நிறுவனம் செய்திருக்கிறது. அதில் கைரேகை மூலம் செயலியை லாக் செய்யும் வசதியை கொடுத்திருக்கிறது.

இதை பிற செயலிகளின் உதவி இல்லாமல் நேரடியாக வாட்ஸ் அப் செயலியின் மூலமாகவே செய்துகொள்ளும் விதமாக கொடுத்திருப்பது கூடுதல் சிறப்பு.

எப்படி செய்வது?

Settings –> privacy –> Unlock with fingerprint 

இவ்வாறாக செய்து இந்த வசதியை உறுதிப்படுத்தலாம். இதில் மூன்று விதமாக கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது உடனடியாக லாக் செய்யும் ஒவ்வொரு முறையும் கைரேகை வசதி வேண்டும், 30 வினாடிகளுக்கு பிறகு கைரேகை வசதி வேண்டும் அல்லது ஒரு நிமிடத்திற்கு பிறகு கைரேகை வசதி வேண்டும் என விருப்பத்திற்கு ஏற்றவாறு தேர்வு செய்து கொள்ளலாம்.

பயனாளிகளின் தகவல்களை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள ஒவ்வொரு நாளும் புதிய புதிய முயற்சிகளை வாட்ஸ்அப் நிறுவனம் செய்து வருவது தொழில்நுட்பத்தை விரும்பும் பலரிடமும் வரவேற்பை ஏற்படுத்தி இருக்கிறது.

மேலும் புதிதாக வாட்ஸ்அப் பயன்படுத்துபவர்களுக்கு உரிய தகவல் பாதுகாப்பு வசதிகளை இயல்பாகவே அந்நிறுவனம் செய்து தருகிறது.