வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு அப்டேட்டில் பிக்சர் இன் பிக்சர் மோடு அறிமுகம்

 

வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு அப்டேட்டில் பிக்சர் இன் பிக்சர் மோடு அறிமுகம்

வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு செயலியில் பிக்சர் இன் பிக்சர் மோட் அனைவருக்கும் வழங்கப்படுகிறது.

டெல்லி: வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு செயலியில் பிக்சர் இன் பிக்சர் மோட் அனைவருக்கும் வழங்கப்படுகிறது.

யூடியூப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் இதர தளங்களில் இருக்கும் வீடியோக்களை வாட்ஸ்அப் பி.ஐ.பி மோட் சப்போர்ட் செய்கிறது. வாட்ஸ்அப் செயலியில் பிக்சர் இன் பிக்சர் மோட் (பி.ஐ.பி.) ஆண்ட்ராய்டு பீட்டா செயலியில் அக்டோபர் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த அம்சம் வீடியோக்களை வாட்ஸ்அப் செயலியில் இருந்தபடியே பார்க்க வழி செய்யும்.

கடந்த சில மாதங்களாக சோதனை செய்யப்பட்டு வந்த பி.ஐ.பி. வசதி ஒருவழியாக அனைவருக்கும் வழங்கப்படுகிறது. புதிய பி.ஐ.பி. மோட் வசதி வாட்ஸ்அப் வெர்ஷன் 2.18.280 வழங்குகிறது. இதுதவிர செயலியில் மேலும் பல்வேறு புதிய வசதிகளை வாட்ஸ்அப் வழங்க இருக்கிறது.