வாட்ஸ்அப்பில் போலி, வெறுப்புணர்ச்சி செய்திகளை பார்வேர்டு செய்தால் 3 ஆண்டு ஜெயில்…. டெல்லி அரசு கமிட்டி எச்சரிக்கை…

 

வாட்ஸ்அப்பில் போலி, வெறுப்புணர்ச்சி செய்திகளை பார்வேர்டு செய்தால் 3 ஆண்டு ஜெயில்…. டெல்லி அரசு கமிட்டி எச்சரிக்கை…

வாட்ஸ்அப்பில் போலி மற்றும் வெறுப்புணர்ச்சி செய்திகளை பார்வேடு செய்தால் 3 ஆண்டு சிறைத்தண்டனை என டெல்லி அரசு கமிட்டி எச்சரிக்கை செய்துள்ளது.

டெல்லி சட்டப்பேரவை அமைதி மற்றும் நல்லிணத்துக்கான புதிய குழு ஒன்றை அமைத்துள்ளது. ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ. சவுரப் பரத்வாஜ் தலைமையிலான இந்த கமிட்டியின் கூட்டம் நேற்று நடைபெற்றது. டெல்லி கலவரத்தை மையமாக வைத்து, நம் நாட்டில் நடைபெற்ற மதவாத கலவரங்கள் பின்னணியில் உள்ள காரணங்கள் குறித்து அந்த கமிட்டி ஆலோசனை செய்தது.

சவுரப் பரத்வாஜ்

வாட்ஸ்அப்பில் போலி மற்றும் வெறுப்புணர்ச்சி செய்திகளை பார்வேடு செய்தால் 3 ஆண்டு சிறைத்தண்டனை கிடைக்கும் என டெல்லி அரசின் அமைதி மற்றும் நல்லிணத்துக்கான கமிட்டி தகவல் தெரிவித்துள்ளது. போலி செய்திகளுக்கு எதிராக பெரிய அளவில் விழிப்புணர்வு பிரச்சாரம் நடத்தப்படும் என இந்த கமிட்டியின் தலைவர் சவுரப் பரத்வாஜ் தெரிவித்தார்.

வாட்ஸ் அப்

சமூக வலைதளங்களில் உலாவரும் போலி செய்திகள் மற்றும் வெறுப்பு கருத்துகள் தொடர்பாக புகார் அளிப்பதற்கான போன் நம்பர் மற்றும் இமெயில் முகவரி போன்றவற்றையும் கமிட்டி வெளியிட்டது. மேலும், போலி செய்திகள் பரப்புவர்கள் தொடர்பாக எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டால் அந்த புகாரை தெரிவித்தவர்களுக்கு ரூ.10 ஆயிரம் பரிசு வழங்கவும் இந்த கமிட்டி பரிந்துரை செய்துள்ளது. கடந்த வாரம் நடைபெற்ற வடகிழக்கு டெல்லி கலவரத்தில் பல பேர்களின் உயிரை காப்பாற்றியவர்களுக்கும் பரிசு வழங்க இந்த கமிட்டி அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.