வாட்ஸ்அப்பில் இந்த காரியங்களை செய்யாதீங்க…மீறினா சிறை தண்டனை உறுதி!

 

வாட்ஸ்அப்பில் இந்த காரியங்களை செய்யாதீங்க…மீறினா சிறை தண்டனை உறுதி!

பிரபல மெசஞ்சர் சேவையான வாட்ஸ்அப்பில் கீழ்கண்ட காரியங்களை செய்தால் சிறைத் தண்டனை உறுதி என தொழில்நுட்ப வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.

பிரபல மெசஞ்சர் சேவையான வாட்ஸ்அப்பில் கீழ்கண்ட காரியங்களை செய்தால் சிறைத் தண்டனை உறுதி என தொழில்நுட்ப வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.

வாட்ஸ்அப் குரூப் உறுப்பினர்கள் சட்டவிரோதமான நடவடிக்கைகளை ஆதரிப்பது, அவற்றை புரமோட் செய்வது கண்டுபிடிக்கப்பட்டால் சம்மந்தப்பட்ட குரூப் அட்மின் கண்காணிக்கப்பட்டு, அவருக்கு சிறைத் தண்டனை அளிக்கப்படும்.

ஆபாசமான வீடியோக்கள், பாலியல் வீடியோக்கள் மற்றும் குறிப்பாக குழந்தைகளை ஆபாசமாக சித்தரிக்கும் எதை பகிர்ந்தாலும் சம்மந்தப்பட்ட நபர் கைது செய்யப்படுவார்.

முக்கியமான மனிதர்களின் புகைப்படத்தை விரும்பத்தகாத வகையில் திருத்தி வாட்ஸ்அப்பில் வெளியிட்டால் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

ttn

வாட்ஸ்அப் மூலம் பெண்ணை துன்புறுத்தினால் சம்மந்தப்பட்ட நபர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்.

குறிப்பிட்ட நபர் மீது தனிநபர் தாக்குதல் மற்றும் அவருடைய பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் வாட்ஸ்அப் செயல்களுக்கு கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

குறிப்பிட்ட மதம் அல்லது வழிபாட்டு தலம் குறித்து விரும்பத்தகாத கருத்துக்களை வாட்ஸ்அப்பில் தெரிவித்தல் அல்லது பகிர்ந்தால் குற்றச் செயல்களாகும்.

போலியான செய்திகள் அல்லது கோப்புகள், வதந்திகள், வன்முறையைத் தூண்டுவது போன்றவற்றை வாட்ஸ்அப்பில் பகிர்ந்தால் கைது நடவடிக்கை பாயும்.

போதைப் பொருள் அல்லது தடை செய்யப்பட்ட பொருட்களை விற்க வாட்ஸ்அப்பை பயன்படுத்தினால் போலீஸ் வீடு தேடி வருவது உறுதி

கேமராவை மறைத்து படம்பிடிக்கப்பட்ட காட்சிகள், சட்டவிரோதமாக குறிப்பிட்ட நபரை படம்பிடித்த காட்சிகள் ஆகியவற்றை வாட்ஸ்அப்பில் பகிர்ந்தால் சிறைத் தண்டனை உறுதி

எனவே நல்லமுறையில், தேவைக்கு ஏற்ப வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்துவது கைது நடவடிக்கை பாயாமலும் சிறைத் தண்டனைக்கு வழிகோளாமலும் இருக்கும்.