வாட்ஸ்அப்பால் இந்தியர்களுக்கு வரும் மிகப்பெரிய சிக்கல்!

 

வாட்ஸ்அப்பால் இந்தியர்களுக்கு வரும் மிகப்பெரிய சிக்கல்!

வாட்ஸ்அப் மூலம் பண பரிவர்த்தனை செய்யும் இணைய பணப்பரிவர்த்தனை முறை விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

வாட்ஸ்அப் மூலம் பண பரிவர்த்தனை செய்யும் இணைய பணப்பரிவர்த்தனை முறை விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதனால் இணைய வர்த்தகத்தில் பெரும் பாதிப்பு ஏற்படும் என பொருளாதார வல்லுனர்கள் கணித்து வருகின்றனர்.

Whats app

வாட்ஸ் அப் செயலியை இந்தியாவில் மட்டும் சுமார் 400 மில்லியன் மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இணையம் மூலம் குறுஞ்செய்திகளை அனுப்பும் பிரதான செயலிகளில் வாட்ஸ்அப் முதல் இடத்தில் இருக்கின்றது. அண்மையில், வாட்ஸ் அப் செயலியில் வைரஸ் எனப்படும் ஸ்பைவேர் தாக்குதல் நடந்தது. இதனை வாட்ஸ்அப் நிறுவனம் ஒப்புக்கொண்டது. 

Whats app

செயலியை அப்டேட் செய்து ஸ்பைவேர் தாக்குதலிலிருந்து பயனாளர்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில் பாதுகாப்பு வசதியை கூட்டியிருக்கிறது. இருப்பினும் பெரும்பாலானோர் தற்போதுவரை முக்கிய ஆவணங்களை வாட்ஸ்அப் செயலி மூலம் அனுப்ப தயங்கி வருகின்றனர். 

இந்நிலையில் கடந்த ஒரு ஆண்டாகவே வாட்ஸ் அப் செயலி மூலம் பணப் பரிவர்த்தனை செய்யும் வகையில் புதிய டிஜிட்டல் பேமென்ட் வசதியை கொண்டுவர அந்நிறுவனம் திட்டமிட்டு வருகிறது. இந்தியாவில் வாட்ஸ்அப் போதுமான அளவிற்கு பாதுகாப்பு இல்லாததால் வாட்ஸ்அப் மூலம் பணப் பரிவர்த்தனை செய்யும் மக்களுக்கு மிகுந்த பாதிப்பு ஏற்படக்கூடும் என பொருளாதார வல்லுனர்கள் கணித்து வருகின்றனர்.

Whats app

பணப் பரிவர்த்தனை செய்யும் செயலியில் ஒருவரின் வங்கி கணக்குகள் குறித்த தரவுகள், பணபரிவர்த்தனை செய்த தரவுகள், கடவுச்சொற்கள் போன்றவை தரவுகளாக உள்ளே சேமிக்கப்பட்டிருக்கும். வாட்ஸ்அப் போன்ற பாதுகாப்பற்ற செயலில் இவ்வாறு தரவுகள் சேமிக்கப்பட்டு இருந்தால் ஸ்பைவேர் மூலம் எளிதில் இணைய கொள்ளையர்களால் கைப்பற்ற இயலும். இந்தியாவின் சைபர் பாதுகாப்பு பிரிவு இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், பயனாளர்களுக்கு இன்னும் அதிக பாதிப்பை கொடுக்கும். 

வாட்ஸ்அப் செயலிக்கு சைபர் பாதுகாப்பு பிரிவு கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கவில்லை என்றால் இணைய பணப்பரிவர்த்தனை பயனாளர்கள் மத்தியில் பெரும் நம்பகத்தன்மையை இழக்க நேரிடும் எனவும் பொருளாதார வல்லுனர்கள் கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.