வாட்டும் வறுமை…வயிற்றை கிள்ளும் பசி: மண்ணை தின்ற குழந்தையின் பரிதாபநிலை?!

 

வாட்டும் வறுமை…வயிற்றை கிள்ளும் பசி: மண்ணை தின்ற குழந்தையின் பரிதாபநிலை?!

பசி கொடுமையால் குழந்தை ஒன்று மண்ணை தின்று உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

அனந்தபூர் : பசி கொடுமையால் குழந்தை ஒன்று மண்ணை தின்று உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ஆந்திர மாநிலத்தின் அனந்தபூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் மகேஷ். இவரது மனைவி  நீலவேணி. இந்த 
தம்பதியினருக்கு 5 குழந்தைகள் உள்ளனர். இதனிடையே  நீலவேணியின் அக்கா மகளான வனிதா என்ற இரண்டு வயது குழந்தையும்  இவர்களுடன் வசித்து வந்துள்ளது. குடிசை பகுதியில் வாழ்ந்து வரும் இப்பகுதி மக்களை  வறுமை வாட்டி வதைக்கிறது. 

main

இந்நிலையில் வறுமையின் காரணமாக உணவில்லாத சூழலில் குழந்தை வனிதா மண்ணை அள்ளி தின்றதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து, வனிதாவுக்கு வயிறு கோளாறு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த மகேஷ் மற்றும் நீலவேணி தம்பதியினர்  தங்கள் வீட்டில் குழந்தை இறந்ததால் கொலைப் பழி வந்துவிடுமோ என்று எண்ணி குழந்தை வனிதாவை வீட்டின் அருகிலேயே புதைத்துள்ளனர். 

baby

இதையடுத்து இது குறித்து போலீசாருக்கு தகவல் செல்ல,  சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சிறுமியின் உடலைத் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்ததில், பசியின் காரணமாகக் குழந்தை மண்ணை தின்றுள்ளதும், அதனைக் காரணமாகவே உயிரிழந்துள்ளதும் தெரியவந்தது. 

mud

முன்னதாக ஆறு மாதத்திற்கு முன்பு சந்தோஷ் என்ற 6 வயது சிறுவன் பசியின் காரணமாக உயிரிழந்தான். இதுவரை  பலி எண்ணிக்கை 2 ஆக உயிரிழந்துள்ளதால் அப்பகுதி மக்கள்  சோகத்தில் மூழ்கியுள்ளனர்.