வாட்டர் ப்ரூஃப் அம்சம் கொண்ட ‘ஜாப்ரா எலைட் ஆக்டிவ் 75டி’ வயர்லெஸ் இயர்பட்ஸ் இந்தியாவில் அறிமுகம்

 

வாட்டர் ப்ரூஃப் அம்சம் கொண்ட ‘ஜாப்ரா எலைட் ஆக்டிவ் 75டி’ வயர்லெஸ் இயர்பட்ஸ் இந்தியாவில் அறிமுகம்

வாட்டர் ப்ரூஃப் அம்சம் கொண்ட ‘ஜாப்ரா எலைட் ஆக்டிவ் 75டி’ வயர்லெஸ் இயர்பட்ஸ் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

டெல்லி: வாட்டர் ப்ரூஃப் அம்சம் கொண்ட ‘ஜாப்ரா எலைட் ஆக்டிவ் 75டி’ வயர்லெஸ் இயர்பட்ஸ் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் ஜாப்ரா நிறுவனம் புதிய வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடலை அறிமுகம் செய்துள்ளது. வாட்டர் ப்ரூஃப் அம்சம் கொண்ட ‘ஜாப்ரா எலைட் ஆக்டிவ் 75டி’ என்பதே அது ஆகும். இந்த சாதனத்திற்கு இரண்டு ஆண்டுகள் வாரண்டி அளிக்கப்படுகிறது. சார்ஜிங் கேஸ் பயன்படுத்தும்போது இது 28 மணி நேரத்திற்கு பேட்டரி பேக்கப் வழங்குகிறது.

ttn

ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் தொடர்ந்து 7.5 மணி நேரங்களுக்கு இந்த இயர்பட்ஸ் மாடலை பயன்படுத்த முடியும். இயர்பட்ஸ் டைட்டானியம் பிளாக், கிரே, சியெனா மற்றும் மின்ட் நிறங்களில் கிடைக்கும் இதன் விலை ரூ.16,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. வருகிற மார்ச் 11-ஆம் தேதி முதல் இந்த இயர்பட்ஸ் மாடலின் விற்பனை அமேசான் தளத்தில் நடைபெற உள்ளது.