வாடிக்கையாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி….. கடனுக்கான வட்டியை 0.15 சதவீதம் வரை குறைத்த எஸ்.பி.ஐ…..

 

வாடிக்கையாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி….. கடனுக்கான வட்டியை 0.15 சதவீதம் வரை குறைத்த எஸ்.பி.ஐ…..

பாரத ஸ்டேட் வங்கி (எஸ்.பி.ஐ.) கால கடனுக்கான அடிப்படை வட்டி விகிதத்தை 0.15 சதவீதம் வரை குறைத்துள்ளது. இதனால் அந்த வங்கி வாடிக்கையாளர்களின் கடனுக்கான வட்டி செலவினம் சிறிது குறையும்.

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்.பி.ஐ., ஒரு வருடத்துக்கான மார்ஜினல் காஸ்ட் (எம்.சி.எல்.ஆர்.) எனப்படும் அடிப்படை வட்டி விகிதத்தை 0.10 சதவீதம் குறைத்துள்ளது. அதாவது ஒரு வருட  காலத்திற்கான  மார்ஜினல் காஸ்ட் (எம்.சி.எல்.ஆர்.) எனப்படும் அடிப்படை வட்டி விகிதத்தை 7.85 சதவீதத்திலிருந்து 7.75 சதவீதமாக குறைத்துள்ளது.  

வட்டி விகிதம் குறைப்பு

3 மாதத்திற்கான எம்.சி.எல்.ஆர். விகிதம் 0.15 சதவீதம் குறைத்து 7.65 சதவீதத்திலிருந்து 7.50 சதவீதமாக நிர்ணயம் செய்துள்ளது. இந்த புதிய வட்டி விகிதங்கள் நேற்று (10ம் தேதி) முதல் அமலுக்கு வந்துள்ளதாக ஸ்டேட் வங்கி தெரிவித்துள்ளது. ஸ்டேட் வங்கியின் குறைப்பு நடவடிக்கையால் அந்த வங்கியின் வாடிக்கையாளர்கள் இன்ப அதிர்ச்சியில் அடைந்துள்ளனர். இந்த வட்டி குறைப்பு நடவடிக்கையால் ஸ்டேட் வங்கி வாடிக்கையாளர்களின் கடனுக்கான வட்டி செலவினம் குறையும். 

ஸ்டேட் வங்கி

ஸ்டேட் வங்கி கடந்த மாதமும் கடனுக்கான வட்டியை குறைத்து இருந்தது குறிப்பிடத்தக்கது. கடனுக்கான வட்டியை தற்போது ஸ்டேட் வங்கி மீண்டும் குறைத்துள்ளதால், இதனை பின்பற்றி மற்ற வங்கிகளும் கடனுக்கான வட்டியை குறைக்க வாய்ப்புள்ளது.