வாடகை வீட்டில் குடியிருப்போர்களிடம் ஒரு மாதம் வாடகை வசூலிக்க தடை: தமிழக அரசு

 

வாடகை வீட்டில் குடியிருப்போர்களிடம் ஒரு மாதம் வாடகை வசூலிக்க தடை: தமிழக அரசு

சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம்  உருவான  கொரோனா வைரஸ் தற்போது  200 நாடுகளில் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த ஆபத்தான நோய் தொற்றிலிருந்து  தப்பிக்க அனைத்து நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.  

சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம்  உருவான  கொரோனா வைரஸ் தற்போது  200 நாடுகளில் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த ஆபத்தான நோய் தொற்றிலிருந்து  தப்பிக்க அனைத்து நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.  உலகம் முழுவதும் 7 லட்சத்து 86 ஆயிரத்து 925 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதுவரை 37,840 பேர் பலியாகி  உள்ளனர்.  இந்தியாவைப் பொறுத்தவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 32ஆகவும்,  பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,251 ஆகவும் அதிகரித்துள்ளது.  தமிழகத்தில் ஒருவர் இறந்துள்ள நிலையில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 74 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரஸை தடுக்க இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத சூழல் நிலவுகிறது. குறிப்பாக வெளிமாநிலங்களில் இருந்து வரும் பேருந்துகள், ரயில்கள் உள்ளிட்ட சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளதால் போக்குவரத்து முற்றிலுமாக முடங்கியுள்ளது. 

பணம்

இந்நிலையில் வெளிமாநிலங்களில் இருந்து வந்து தங்கியுள்ள தொழிலாளர்கள் உட்பட யாரிடமும், ஒரு மாதம் வாடகை வசூலிக்கக்கூடாது என வீட்டு உரிமையாளர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.  வெளிமாநிலத் தொழிலாளர்கள், மாணவர்களிடம் வீட்டு வாடகை கேட்டு கட்டாயப்படுத்தும் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் காலி செய்யக்கூறி கட்டாயப்படுத்தக்கூடாது என தமிழக அரசு கேட்டுக்கொண்டுள்ளது.