வாடகை அலுவலகம்/வீடு சட்டம் அமலுக்கு வருகிறது!

 

வாடகை அலுவலகம்/வீடு சட்டம் அமலுக்கு வருகிறது!

குருவிக்கூடு மாதிரி ஒரு வீட்டைக்கட்டி வச்சுக்கிட்டு, ஹவுஸ் ஓனர்ன்ற பேர்ல சில பேர் பண்ற அலும்பு இருக்கே, ஆணி அடிக்காத, போட்டோ மாட்டாத, 10 மணிக்கு மேல கேட்டை ஆட்டாதேன்னு அய்ய்யய்யோ. அதேமாதிரி வாடகைக்கு குடிவந்தவர்களையும் சும்மா சொல்லக்கூடாது.

குருவிக்கூடு மாதிரி ஒரு வீட்டைக்கட்டி வச்சுக்கிட்டு, ஹவுஸ் ஓனர்ன்ற பேர்ல சில பேர் பண்ற அலும்பு இருக்கே, ஆணி அடிக்காத, போட்டோ மாட்டாத, 10 மணிக்கு மேல கேட்டை ஆட்டாதேன்னு அய்ய்யய்யோ. அதேமாதிரி வாடகைக்கு குடிவந்தவர்களையும் சும்மா சொல்லக்கூடாது. வாடகையை வாங்குவதற்குள் ஹவுஸ் ஓனருக்கு முழி பிதுங்கிவிடும். இது எல்லாவற்றுக்கும் முடிவுகட்ட, வீடு மற்றும் அலுவலக தேவைகளுக்கான வாடகை கட்டிடங்கள் ஒழுங்குமுறை சட்டத்திற்கான வரைவு மசோதா குறித்து கருத்து கேட்டுள்ளது மத்திய அரசு.

To let

இந்த வரைவு மசோதாவின்படி, வாடகையை உயர்த்துவதற்கு மூன்று மாதங்களுக்குமுன் எழுத்து பூர்வ நோட்டீஸ் தரவேண்டும், அட்வான்ஸ் தொகையாக இரண்டு மாதம் வாடகை தொகையை மட்டும் வாங்க வேண்டும், உரிமையாளர் மற்றும் வாடகைக்கு இருக்கும் நபர் இருவரும் தனித்தனியாக  வாடகை ஒப்பந்தத்தின் நகலை தாக்கல் செய்ய வேண்டும், 
வீட்டை பழுது பார்க்கும் செலவை வீட்டு உரிமையாளர் ஏற்க வேண்டும், ஒப்பந்தம் முடித்த  பிறகும் வீட்டை காலி செய்யவில்லை என்றால் முதல் இரண்டு மாதம் வாடகையை இரு மடங்கு செய்து கொள்ளலாம் தொடர்ந்தால் நான்கு மடங்கு வாடகையை உயர்த்தி கொள்ளலாம் என்றும் மேற்படி மசோதாவில் கூறப்பட்டுள்ளது.