வாடகைக்கு வழங்கியுள்ள கார்களை திருப்பி அளிக்க ஓலா நிறுவனம் உத்தரவு!

 

வாடகைக்கு வழங்கியுள்ள கார்களை திருப்பி அளிக்க ஓலா நிறுவனம் உத்தரவு!

தமிழகத்தில் 26 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 15,000 க்கும் மேற்பட்டோர் அவரவர்  வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் 26 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 15,000 க்கும் மேற்பட்டோர் அவரவர்  வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். கொரோனா அறிகுறியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நூற்றுக்கு மேற்பட்டோரின் ரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. கொரோனாவால் அனைத்து வணிக வளாகங்களும் மூடப்பட்டுள்ள நிலையில், பல நிறுவனங்கள் முடங்கியுள்ளன. குறிப்பாக ஆன்லைன் மூலம் இயங்கும் நிறுவனங்களான OLA நிறுவனமும் முடங்கியுள்ளது. 

ttn

செயலி மூலம் இயங்கும் இந்த நிறுவனம், ஊரடங்கு உத்தரவு காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதே போல டிரைவர்களுக்கு வாடகைக்கு வழங்கியுள்ள கார்களின் வாடகையை தள்ளுபடி செய்வதாக அறிவித்திருந்தது. இந்நிலையில் நாடு முழுவதும் 30 ஆயிரம் டிரைவர்களிடம் வாடகைக்கு விட்டுள்ள கார்களை திருப்பி அளிக்குமாறு ஓலா நிறுவனம் உத்தரவிட்டுள்ளது. ஆனால், ஊருடங்கால் கார்களை திருப்பி அளிக்க முடியாமல் டிரைவர்கள் திணறி வருகின்றனர்.