வாஜ்பாய் 95-வது பிறந்த நாள் : லக்னோவில் 25 அடி வெண்கலச் சிலை திறப்பு !

 

வாஜ்பாய் 95-வது பிறந்த நாள் : லக்னோவில் 25 அடி வெண்கலச் சிலை திறப்பு !

மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 95-வது  பிறந்தநாளை முன்னிட்டு, இன்று டெல்லியில் உள்ள வாஜ்பாய் நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.

மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 95-வது  பிறந்தநாளை முன்னிட்டு, இன்று டெல்லியில் உள்ள வாஜ்பாய் நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர். வாஜ்பாய் நினைவிடத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், அத்வானி உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர். 

ttn

அதனையடுத்து, உத்திர பிரதேச மாநிலம் லக்னோவின் தலைமைச் செயலகமான லோக்பவனில் வாஜ்பாயின் 25 அடி வெண்கல சிலையை நரேந்திர மோடி திறந்து வைத்தார். வாஜ்பாயின் பிறந்தநாளையொட்டி, அங்கு பல்வேறு கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. வாஜ்பாய் சிலையைத் திறந்து வைத்த மோடி, மலர் தூவி மரியாதை செலுத்தினார். அப்பகுதி முழுவதும் ஆயிரக் கணக்கான போலீசார் குவிக்கப்பட்டுப் பலத்த பாதுகாப்பு போடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் லோக்சபா சபாநாயகர் ஓம்பிர்லா உள்ளிட்ட பல தலைவர்கள் கலந்து கொண்டனர். மேலும்,  உத்திர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் ஆளுநர் ஆனந்தி பென் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.