வாஜ்பாய் பிறந்தநாள்… பிரதமர் மோடி மரியாதை

 

வாஜ்பாய் பிறந்தநாள்… பிரதமர் மோடி மரியாதை

முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 94-வது பிறந்தநாளையொட்டி அவரது நினைவிடத்தில் பிரதமர் மோடி இன்று மரியாதை செலுத்தினார்.

டெல்லி: முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 94-வது பிறந்தநாளையொட்டி அவரது நினைவிடத்தில் பிரதமர் மோடி இன்று மரியாதை செலுத்தினார்.

பாஜகவின் மூத்த தலைவரும், இந்தியாவின் முன்னாள் பிரதமருமான வாஜ்பாய் கடந்த 1924-ம் ஆண்டு பிறந்தார். இந்திய பிரதமர்களில் முக்கியத்துவம் வாய்ந்த பிரதமராக கருதப்படும் வாஜ்பாய் கடந்த ஆகஸ்ட் 16-ம் தேதி உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.

இந்நிலையில், இன்று அவரது 95-வது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. அதனையொட்டி அவரது நினைவிடத்தில் பிரதமர் மோடி, பாஜக தேசிய தலைவர் அமித் ஷா, மத்திய அமைச்சர் நிதின் கட்காரி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். முன்னதாக அவரது பிறந்தநாளையொட்டி வாஜ்பாய் உருவம் பொறித்த ரூ 100 நாணயம் நேற்று வெளியிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.