வாங்குனது 10 ஓட்டு தான்…ஆனாலும் ஊராட்சி மன்ற தலைவரான பெண்!

 

வாங்குனது 10 ஓட்டு தான்…ஆனாலும் ஊராட்சி மன்ற தலைவரான பெண்!

10 மாவட்டங்களில்  வாக்கு எண்ணிக்கையின் முடிவுகள் முழுமையாக அறிவிக்கப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டத்தில் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட பெண் ஒருவர், 10 வாக்குகள் மட்டுமே பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

ஊரக உள்ளாட்சித் தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற்று  முடிந்த நிலையில் வாக்கு  எண்ணிக்கையானது  இன்று காலை 8 மணிக்குத் தொடங்கியது. அதில் ஊராட்சி மன்ற தலைவர், ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர், ஒன்றியக்குழு உறுப்பினர் மாவட்ட குழு உறுப்பினர் உள்ளிட்ட 4 பதவிகளுக்கான வாக்கு எண்ணிக்கை  விறுவிறுப்பாக நடைபெற்றது. சில காரணங்களுக்காகப் பல இடங்களில் வாக்கு  எண்ணிக்கை தாமதம் ஆனது. இதனால் விடிய விடிய வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. மதுரை, நாமக்கல் உள்ளிட்ட இடங்களில் மறு வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டது. இருப்பினும் நாமக்கல், கன்னியாகுமரி, நீலகிரி, தேனி ஆகிய 10 மாவட்டங்களில்  வாக்கு எண்ணிக்கையின் முடிவுகள் முழுமையாக அறிவிக்கப்பட்டது.

ttn

இந்நிலையில் திருச்செந்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பிச்சிவிளை ஊராட்சியில் தலைவர் பதவி பட்டியலினத்தவருக்கு ஒதுக்கப்பட்டது. இதில் பட்டியலினத்தைச் சேர்ந்த ராஜலட்சுமி, சுந்தரி ஆகியோர் போட்டியிட்டனர். ஆனால்  பட்டியலினத்தவருக்கு ஒதுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மற்ற சமூகத்தினர் யாரும் வாக்களிக்கவில்லை. இதனால் தேர்தலில் மொத்தம் 13 வாக்குகளே பதிவாகியிருந்தன. வாக்குகள் எண்ணப்பட்டதில் ராஜலட்சுமி 10 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.