வாங்கிய வங்கிக்கடனில் இன்னும் 1 ரூபாய் கூட மல்லையா செலுத்தவில்லை – மத்திய அரசு

 

வாங்கிய வங்கிக்கடனில் இன்னும் 1 ரூபாய் கூட மல்லையா செலுத்தவில்லை – மத்திய அரசு

வங்கியில் வாங்கிய கடனில் 1 ரூபாய் கூட திருப்பி செலுத்தவில்லை என மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. 

வங்கியில் வாங்கிய கடனில் 1 ரூபாய் கூட திருப்பி செலுத்தவில்லை என மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. 

முன்னாள் மதுபான சக்கரவர்த்தியும், தற்போது முடங்கி கிடக்கும் கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் அதிபருமான விஜய் மல்லையா பல வங்கிகளில் 9 ஆயிரம் கோடி கடனை வாங்கி விட்டு திரும்ப செலுத்தவில்லை. இதனையடுத்து வங்கிகள் கொடுத்த கடனை திரும்ப கேட்க தொடங்கின. ஆனால் மல்லையா அவற்றை கொஞ்சம் கூட கண்டுகொள்ளாமல் வெளிநாட்டுக்கு தப்பிச்சென்றார். 

vijay mallya

இதையடுத்து சட்ட விரோத பணபரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின் கீழ் அவர் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகிறது. பிரிட்டனில் தஞ்சம் அடைந்துள்ள மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்தும் முயற்சியிலும் மத்திய அரசு ஈடுபட்டுவருகிறது. இதற்கிடையில் விஜய் மல்லையாவின் சொத்துக்களை பறிமுதல் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துவருகின்றனர். தன்மீது தொடுக்கப்பட்ட வழக்கை  தடை செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் விஜய் மல்லையா மனுதாக்கல் செய்தார்.

இந்த மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது கடன்வாங்கிவிட்டு வெளிநாடு தப்பிச்சென்ற மல்லையா, இதுவரை 1 ரூபாய் கூட திருப்பி செலுத்தவில்லை என மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.  இதனைக் கேட்ட நீதிபதிகள், வழக்கிலிருந்து மல்லையா தப்பிய முயற்சிக்க முடியாது என எச்சரித்தார்.