வாங்கின காசுக்குமேல் ஓவராக கூவி பொது இடத்தில் பேனர் வைத்தால் சிறை!

 

வாங்கின காசுக்குமேல் ஓவராக கூவி பொது இடத்தில் பேனர் வைத்தால் சிறை!

பேனர் வைக்க சென்னை மாநகராட்சி வகுத்துள்ள விதிகளை மதித்து வைக்கவேண்டும் எனவும், மீறுவோர்மீது வழக்கு தொடுத்து ஒரு வருட சிறைதண்டனை வாங்கித்தரப்படும் எனவும் எச்சரித்துள்ளார். பேனர் வைப்பதற்கான விதிமுறைகளையும் ஆணையர் விவரித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து சாலைகளிலும் விளம்பர பேனர்கள் வைக்க கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில் சென்னை மாநகராட்சி கமிஷனர் கோ.பிரகாஷ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், உயர்நீதிமன்ற இடைக்கால தடை ஒருவேளை விலக்கிக்கொள்ளப்பட்டாலும்கூட, பேனர் வைக்க சென்னை மாநகராட்சி வகுத்துள்ள விதிகளை மதித்து வைக்கவேண்டும் எனவும், மீறுவோர்மீது வழக்கு தொடுத்து ஒரு வருட சிறைதண்டனை வாங்கித்தரப்படும் எனவும் எச்சரித்துள்ளார். பேனர் வைப்பதற்கான விதிமுறைகளையும் ஆணையர் விவரித்துள்ளார்.

Banners displayed at public places

விளம்பர பேனர்கள் வைக்க அனுமதி கோரும் விண்ணப்பதாரர், அனுமதி கோரும் நாளுக்கு 2 நாட்களுக்கு முன்பு சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்தில் தடையின்மை சான்று, பேனர் வைக்கப்படும் இடத்திற்கான தடையின்மை சான்று, இடத்திற்கான வரைபடம் ஆகியவற்றுடன் விண்ணப்பிக்க வேண்டும். விளம்பர பேனர்கள் நடைபாதை ஓரமாக அமைக்க அனுமதி வழங்கும் பட்சத்தில் இருபுற சாலையின் நடுவில் அமைக்கக்கூடாது. அனுமதிக்கப்பட்ட அளவைவிடவும், எண்ணிக்கையை விடவும் கூடுதலாக பேனர்கள் வைக்கக்கூடாது. ஒவ்வொரு விளம்பர பேனர்களுக்கு இடையே 10 மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும். டிஜிட்டல் பேனர் பிரிண்டிங் சங்கம் மற்றும் சங்க உறுப்பினர்கள் பெருநகர சென்னை மாநகராட்சியிடம் அனுமதி பெற்றவர்களுக்கு மட்டுமே விளம்பர பேனர்கள் அச்சடிக்கும் பணிகளை மேற்கொள்ள வேண்டும். கடந்த பிப்ரவரி மாதம் 21-ந்தேதி நடைபெற்ற இதற்கான கலந்தாய்வு கூட்டத்தில் அறிவுரைகள் வழங்கப்பட்டது. மேலும் பெருநகர சென்னை மாநகராட்சியின் சட்ட விதி முறைகளை மீறுபவர்களுக்கு ஒரு வருட சிறைத் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படும்.