வாக்கு எண்ணும் அதிகாரிகள் குளறுபடி.. வாக்கு எண்ணிக்கை தாமதம் !

 

வாக்கு எண்ணும் அதிகாரிகள் குளறுபடி.. வாக்கு எண்ணிக்கை தாமதம் !

ஊராட்சி மன்ற தலைவர், ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர், ஒன்றியக்குழு உறுப்பினர் மாவட்ட குழு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கு 4 வகையான வாக்குச்சீட்டுகளின் எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

இரண்டு கட்டங்களாக நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலின் அனைத்து வாக்கு பெட்டிகளும், தேர்தல் முகவர்களின் முன்னிலையில் சீல் உடைக்கப்பட்டு, இன்று காலை 8 மணிக்கு பொதுவான வாக்கு எண்ணும் மையங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டது. ஊராட்சி மன்ற தலைவர், ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர், ஒன்றியக்குழு உறுப்பினர் மாவட்ட குழு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கு 4 வகையான வாக்குச்சீட்டுகளின் எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

 

ttn

விருதுநகர் மாவட்டம் சாத்தூர், வேதாரண்யம் ஒன்றியம்,ஆரணி உள்ளிட்ட பகுதிகளில் காலை உணவு வழங்கப்படாததாலும், விருதுநகர் அருப்புக்கோட்டையில் வாக்குப் பெட்டிகளின் சாவி தொலைந்ததாலும் வாக்கு எண்ணிக்கை தாமதம் ஆனது. குறிப்பாக, வாக்கு எண்ணிக்கை மையங்களில் எந்த அறைக்குச் செல்வது? வாக்குச் சீட்டுகளைப் பிரிப்பது ? அவற்றை எப்படி எண்ணுவது என்று முறையாக ஊழியர்களுக்கு போதிய பயிற்சி இல்லாததால் பல எண்ணிக்கை மையங்களில் வாக்கு எண்ணிக்கை தாமதமாகத் தொடங்கியுள்ளது. இதற்கு அனைத்து கட்சிகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.