வாக்கு எண்ணிக்கை முழுவதும் வீடியோவில் பதிவு செய்யப்படும்- தேர்தல் அதிகாரி

 

 வாக்கு எண்ணிக்கை முழுவதும் வீடியோவில் பதிவு செய்யப்படும்- தேர்தல் அதிகாரி

தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை முழுவதும் வீடியோவில் பதிவு செய்யப்படும் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை முழுவதும் வீடியோவில் பதிவு செய்யப்படும் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.

நாட்டின் மக்களவைத் தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் மாதம் 11ஆம் தேதி தொடங்கி, கடந்த 19ஆம் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நாளை காலை 8 மணிக்கு தொடங்குகிறது. இந்நிலையில் வாக்கு எண்ணிக்கை வீடியோ பதிவு செய்யப்படும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாகு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், வாக்கு எண்ணும் பணியில் 17 ஆயிரத்துக்கும் அதிகமான பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். வாக்கு எண்ணிக்கையை 88 பார்வைளாளர்கள் கண்காணிக்க உள்ளனர். அதிகபட்சமாக திருவள்ளூரில் 34 சுற்றுகளாகவும், குறைந்தபட்சமாக மத்திய சென்னையில் 19 சுற்றுகளாகவும் வாக்குகள் எண்ணப்படுகின்றன. மின்னணு இயந்திர வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்ட பிறகுதான், ஒப்புகைச் சீட்டுகள் எண்ணப்படும். வாக்கு எண்ணிக்கை முழுவதும் வீடியோ பதிவு செய்யப்படும்.  வாக்கு எண்ணிக்கை அமைதியாக நடைபெறுவதற்காக வாக்கு எண்ணும் மையங்களில் 36 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். ஒவ்வொரு சுற்று முடிந்தபிறகும் முடிவுகள் உடனுக்குடன் வெளியிடப்படும் எனக்கூறினார்.