வாக்கு எண்ணிக்கை சிசிடிவி காட்சிகளை ஒப்படைக்க அவகாசம் இல்லை: நீதிமன்றம் கெடுபிடி

 

வாக்கு எண்ணிக்கை சிசிடிவி காட்சிகளை ஒப்படைக்க அவகாசம் இல்லை: நீதிமன்றம் கெடுபிடி

வாக்கு எண்ணிக்கையை சிசிடிவி கேமராக்கள் பொருத்தி பதிவு செய்ய வேண்டும் என்று திமுக உயர்நீதி மன்ற மதுரை கிளையில்  மனுத் தாக்கல் செய்தது.

நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலின் வாக்கு எண்ணிக்கையை சிசிடிவி கேமராக்கள் பொருத்தி பதிவு செய்ய வேண்டும் என்று திமுக உயர்நீதி மன்ற மதுரை கிளையில்  மனுத் தாக்கல் செய்தது. அதனை விசாரித்த நீதிபதிகள், வாக்கு எண்ணிக்கை முழுவதுமாக சிசிடிவி கேமராக்கள் மூலம் பதிவு செய்து, 3 ஆம் தேதி மாலை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. அதன் படி, சிசிடிவி காட்சிகள் பொறுத்தப்பட்டு வாக்கு எண்ணிக்கை பதிவு செய்யப்பட்டன. வாக்கு எண்ணிக்கை 2 நாட்கள் நடந்ததால், சிசிடிவி காட்சிகளை மாநில தேர்தல் ஆணையம் ஒப்படைக்காமல் தாமதித்து வந்தது. 

ttn

இது தொடர்பான வழக்கு விசாரணை இன்று மீண்டும் வந்தது. அதில் நீதிபதிகள், வாக்கு எண்ணிக்கையின் சிசிடிவி காட்சிகள் எங்கே என்று கேள்வு எழுப்பியுள்ளனர். சிசிடிவி காட்சிகளை ஒப்படைக்க கால அவகாசம் வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையம் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், சிசிடிசி காட்சிகளை சமர்ப்பிக்க கூறிய காரணம் ஏற்புடையது அல்ல என்று கூறியுள்ளனர். மேலும், சிசிடிவி காட்சிகளை ஒப்படைக்க கால அவகாசம் இல்லை என்று உத்தரவிட்டுள்ளனர்.