வாக்கு எண்ணிக்கையின் சிசிடிவி காட்சிகளை நீதி மன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் : நீதிமன்றம் தீர்ப்பு

 

வாக்கு எண்ணிக்கையின் சிசிடிவி காட்சிகளை நீதி மன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் : நீதிமன்றம் தீர்ப்பு

ஊரக உள்ளாட்சித் தேர்தல் இன்றோடு முடிவடையும் நிலையில், வரும் ஜனவரி 2 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

ஊரக உள்ளாட்சித் தேர்தல் இன்றோடு முடிவடையும் நிலையில், வரும் ஜனவரி 2 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள இடங்களில் சிசிடிவி கேமரா பொருத்திக் கண்காணிக்க வேண்டும் என்றும் வாக்கு எண்ணிக்கையின் போது அதனை வீடியோவாக பதிவு செய்ய வேண்டும் என்றும் திமுக உள்ளிட்ட கட்சிகள் உயர்நீதி மன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்தன. 

ttn

இன்று அந்த மனு விசாரணைக்கு வந்தது. அதில், வாக்கு எண்ணிக்கை முழுவதுமாக வீடியோவாக பதிவு செய்யப்பட வேண்டும் என்று திமுக சார்பில் விவாதிக்கப்பட்டது. இந்த மனு வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடக்கும் என்ற நோக்கோடு கொடுக்கப்பட்டுள்ளது என்று கூறிய  மாநில தேர்தல் ஆணையம் வாக்கு எண்ணிக்கையை வீடியோவாக பதிவு செய்ய ஒப்புக் கொண்டது. 

ttn

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கையை சிசிடிவி காட்சிப் பதிவு செய்ய வேண்டும் என்றும் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகு அதனை  உயர்நீதிமன்ற பதிவாளரிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளனர்