வாக்கு இயந்திரம் மனது வைத்தால் மீண்டும் பிரதமர் ஆவார் மோடி?!..

 

வாக்கு இயந்திரம் மனது வைத்தால் மீண்டும் பிரதமர் ஆவார் மோடி?!..

மின்னணு வாக்கு இயந்திரத்தை ஹேக் செய்து பாஜக வெற்றிபெறும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

மின்னணு வாக்கு இயந்திரத்தை ஹேக் செய்து பாஜக வெற்றிபெறும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்திய தேர்தல் ஆணையம் பாஜகவுக்கு சாதகமாக செயல்படுவதாய் குற்றசாட்டுகள் எழுந்து வருகிறது. தேர்தல் நேரத்தை அறிவிக்க தாமதம் செய்தது கூட பிரதமர் மோடியின் திட்டத்திற்கு ஏற்ப தேர்தல் ஆணையம் செய்த அட்ஜஸ்ட்மெண்ட் என்று கூறப்பட்டது. மின்னணு வாக்கு இயந்திரம் வேண்டாம் என சில எதிர்க்கட்சிகள்  வலியுறுத்தக் காரணம், இதற்கு முன்பு நடந்த தேர்தல்களில் அதில் நடந்த கோளாறுகளே.

vote

மத்திய பிரதேசம், சட்டிஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் நடைபெற்ற தேர்தலில், எந்த சின்னத்துக்கு வாக்களித்தாலும் பாஜகவுக்கு வாக்கு பதிவாகும் பிரச்சனை ஏற்பட்டது. தகவல் தொழில்நுட்பத்துறையில் பாஜக தரப்புக்கு கார்ப்ரேட் துணை நிற்கிறது. 2014-ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில், பாஜகவுக்கு அம்பானி நிறுவனம் உதவி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. செய்யது சுஜா என்பவரின் ஹேக்கிங் டீமை கொலை செய்வதாக மிரட்டி, மின்னணு வாக்கு இயந்திரத்தை ஹேக் செய்ய வைத்திருக்கிறது கார்ப்ரேட் நிறுவனம்! இந்நிலையில் இந்தமுறையும் மின்னணு வாக்கு இயந்திரம் மூலமாகதான் வாக்குகள் சேகரிக்கப்பட உள்ளது.

bjp

புல்வாமா தாக்குதலுக்கு பிறகு பாஜகவின் வாக்கு வங்கி அதிகரித்திருப்பதாக பெரும்பான்மையான ஊடகங்கள் தகவல் தெரிவித்து வருகின்றன. இதுகூட வாக்கு இயந்திரத்தை ஹேக் செய்து ஜெயித்தால், யாருக்கும் சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக கூறப்படும் பொய்யாக இருக்கலாம் என பொது வெளியில் விமர்சிக்கப்படுகிறது. எது எப்படியோ, இந்த தேர்தலில் எதிர்க்கட்சிகள் அனைத்தும் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டிருக்கிறது. அப்படி விழிப்புணர்வோடு செயல்படாவிட்டால், மீண்டும் மோடி அலை அடிப்பதை யாராலும் தடுக்க முடியாது.