வாக்குப்பதிவு எந்திரத்தை தூக்கி போட்டு உடைத்த வேட்பாளர்: ஆந்திராவில் பரபரப்பு !

 

வாக்குப்பதிவு எந்திரத்தை தூக்கி போட்டு உடைத்த வேட்பாளர்: ஆந்திராவில் பரபரப்பு !

ஆந்திராவில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தை உடைத்த ஜனசேனா வேட்பாளர் கைது செய்யப்பட்டார்.

ஆந்திரா: ஆந்திராவில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தை உடைத்த ஜனசேனா வேட்பாளர் கைது செய்யப்பட்டார்.

தொடங்கிய வாக்குப்பதிவு

vote

மக்களவை தேர்தல் இன்று முதல் அடுத்த மாதம் 19-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. முதல் கட்டமாக அருணாசலபிரதேசம், ஆந்திரபிரதேசம், அசாம், பீகார், சட்டீஸ்கர், ஜம்மு காஷ்மீர், மகாராஷ்டிரா உள்ளிட்ட 18 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 91 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகின்றது. 

ஆந்திராவில் ஒரே கட்டமாக இன்று தேர்தல்

andhra

ஆந்திராவில் 25 மக்களவை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது. பாஜக, காங்கிரஸ், தெலுங்குதேசம், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் உள்ளிட்ட முக்கிய கட்சிகள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் என 319 பேர் போட்டியிட்டுள்ளனர். இங்கு  3 கோடியே 93 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். 

வாக்குப்பதிவு எந்திரத்தை உடைத்த வேட்பாளர்
 

இந்நிலையில்  ஜனசேனா கட்சி சார்பில்  குண்டக்கல் சட்டப்பேரவைத் தொகுதியில் மதுசூதன் குப்தா என்பவர் போட்டியிடுகிறார். இவர் அந்த பகுதியில் உள்ள வாக்குச்சாவடிக்கு வருகை புரிந்தார். அப்போது வாக்காளர்களின் பெயர்கள் சரியாக அச்சடிக்கப்படவில்லை என்று கூறி  அங்கிருந்த தேர்தல் அதிகாரிகளுடன் தகராறில் ஈடுபட்டார். இந்த வாக்குவாதத்தில் அவர்  மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தை உடைத்தார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் வேட்பாளரின் இந்த செய்கையால் அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.  இதையடுத்து போலீசார் ஜனசேனா கட்சி வேட்பாளரைக் கைது செய்தது குறிப்பிடத்தக்கது. 

இதையும் வாசிக்க: வறுமையை பயன்படுத்தி சிறுமியை கர்ப்பமாக்கிய முதியவர்: அதிர்ச்சி தரும் சம்பவம்!