வாக்குச்சாவடியைப் பூட்டிய சுயேச்சை வேட்பாளர்.. மதுரையில் பரபரப்பு !

 

வாக்குச்சாவடியைப் பூட்டிய சுயேச்சை வேட்பாளர்.. மதுரையில் பரபரப்பு !

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் வாக்குப்பதிவில் மதுரையைச் சேர்ந்த சுயேச்சை வேட்பாளர் ஒருவர் வாக்குச்சாவடியைப் பூட்டியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழகத்தில் உள்ள 27 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான முதல் கட்ட தேர்தல் இன்று காலை 7 மணியளவில் வாக்குப்பதிவு தொடங்கியது. மக்கள் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றுவதற்காக அனைத்து தனியார் மற்றும் அரசு நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு அளிக்கப்பட்டுள்ளது. விறுவிறுப்பாக நடைபெற்று வரும் வாக்குப்பதிவில் மதுரையைச் சேர்ந்த சுயேச்சை வேட்பாளர் ஒருவர் வாக்குச்சாவடியைப் பூட்டியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ttn

மதுரை ஒத்தக்கடை பகுதியில் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்குச் சுயேச்சையாகப் போட்டியிடுகிறார் முத்துக் கிருஷ்ணன். அந்த பகுதியில் திமுக மற்றும் அதிமுக சார்பாகப் போட்டியிடும் வேட்பாளர்கள், ஊராட்சி ஒன்றிய பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் மக்களிடம் ஓட்டுப் போடச் சொல்வதாக காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார். அதனால் ஆத்திரமடைந்த முத்துக் கிருஷ்ணன்,  வாக்குச்சாவடியைப் பூட்டியுள்ளார். தகவல் அறிந்து அந்த இடத்திற்குச் சென்ற மாவட்ட ஆட்சியர் தற்போது ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இதனால், அங்கு வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டுள்ளது.