வாக்குக்குப் பணம்..பறக்கும் படையினரைக் கண்ட பயத்தில் ரோட்டில் தூக்கி வீசப்பட்ட பணம்!

 

வாக்குக்குப் பணம்..பறக்கும் படையினரைக் கண்ட பயத்தில் ரோட்டில் தூக்கி வீசப்பட்ட பணம்!

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியானதிலிருந்தே தேர்தல் ஆணையம் பறக்கும் படையினரை வைத்துக் கண்காணித்து வருகிறது. 

தேர்தல் என்றாலே வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பதும், மக்கள் அதனை வாங்கிக் கொள்வதும் வழக்கமான ஒன்றாகி விட்டது. உங்கள் ஓட்டுக்களை விற்காதீர் என்று தேர்தல் ஆணையம் என்ன தான் அறிவுறுத்தினாலும் மக்கள் அதனைக் கேட்பதாக இல்லை. வாக்குக்குப் பணம் கொடுப்பது சட்டப்படி குற்றம் என்றாலும் வேட்பாளர்கள் அதனைக் கேட்பதாக இல்லை .

ttn

நாளை தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் உள்ளது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியானதிலிருந்தே தேர்தல் ஆணையம் பறக்கும் படையினரை வைத்துக் கண்காணித்து வருகிறது. இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டம் சீமாபுதூர் என்னும் பகுதியில் நாளை நடைபெறவுள்ள தேர்தலுக்காக அப்பகுதியைச் சேர்ந்த வேட்பாளர்கள் சார்பில் சிலர் பணம் கொடுக்க முயல்வதாகப் பறக்கும் படையினருக்குத் தகவல் கிடைத்துள்ளது.

ttn

உடனே அந்த இடத்திற்கு அதிகாரிகள் சென்றுள்ளனர். அவர்களைப் பார்த்தவுடன் பயத்தில் என்ன செய்வதென்று பதறிய 4 பேர், கையில் வைத்திருந்த பணம் அனைத்தையும் சாலையில் வீசி விட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். அவர்கள் வீசிய பையை அதிகாரிகள் பார்த்த போது, அதில் மொத்தமாக ரூ.1,35,000 பணம் இருந்தது தெரிய வந்துள்ளது. இது குறித்துப் பறக்கும் படை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.