வாக்கி டாக்கி முறைகேடு : போலீசார் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் சோதனை!

 

வாக்கி டாக்கி முறைகேடு : போலீசார் வீடுகளில்  லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் சோதனை!

இது தொடர்பாகச் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ஆனால், அந்த மனு சமீபத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது. 

தமிழகக் காவல்துறைக்கு வாக்கி டாக்கி வாங்குவதற்கான டெண்டரை  தமிழகக் காவல்துறை தலைமை இயக்குநர் மோட்டோரோலா சொல்யூசன்ஸ் என்ற நிறுவனத்திற்குக் கொடுத்தார். இது குறித்து 11 கேள்விகள் எழுப்பிய உள்துறைச் செயலர் நிரஞ்சன் மார்டி, விளக்கம் அளிக்குமாறு தலைமை இயக்குநருக்குக் கடிதம் எழுதினார். அந்த கடிதத்தில் வாக்கி டாக்கி வாங்குவதற்காக  83.45 கோடி ரூபாய்க்குக் கொடுக்கப்பட்டுள்ள டெண்டரில் மிகப்பெரிய ஊழல் நடந்திருப்பதாக அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். இது தொடர்பாகச் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ஆனால், அந்த மனு சமீபத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது. 

ttn

இந்நிலையில் வாக்கி டாக்கி வாங்குவதில் ஊழல் நடந்திருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்த 2016 ஆம் ஆண்டு தொழில்நுட்ப பிரிவில் பணியாற்றிய போலீசாருக்கு சொந்தமான இடங்களில் இன்று காலை லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அந்த ஆண்டு பொறுப்பிலிருந்த  எஸ்.பி மற்றும்  டி.எஸ்.பி வீடுகளிலும் அவர்களுக்குச் சொந்தமான இடங்களிலும் சோதனை நடைபெற்று வருகிறது.