வாக்காளர் பட்டியலுக்கான சிறப்பு முகாம்கள் இன்று தொடக்கம் !

 

வாக்காளர் பட்டியலுக்கான சிறப்பு முகாம்கள் இன்று தொடக்கம் !

கடந்த 4 மற்றும் 5 ஆம் தேதி வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு மற்றும் திருத்தம் மேற்கொள்வதற்காகச் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டது.

27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடந்து முடிந்து, அதன் முடிவுகளும்  வெளியிடப்பட்டன. விரைவில் நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் விரைவில் தேர்தல் நடத்தப்படும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்நிலையில், கடந்த 4 மற்றும் 5 ஆம் தேதி வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு மற்றும் திருத்தம் மேற்கொள்வதற்காகச் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டது. தமிழகம் முழுவதும் 67,687 ஓட்டுச்சாவடிகளில் சிறப்பு முகாம்களுக்கான ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில், சுமார் 9 லட்சம் பேர் அதன் மூலம் பயனடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. 

tttn

அன்று பணிகள் முழுமையாக நிறைவடையாததால் மீண்டும் 11(இன்று) மற்றும் 12 ஆம் தேதி சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்திருந்தார். அதன் படி, 18 வயது பூர்த்தி அடைந்தவர்களின் பெயர் வாக்காளர் பட்டியலில் சேர்க்கவும், ஏற்கனவே இருக்கும் பெயர், முகவரிகளில் திருத்தம் செய்யவும் இந்த சிறப்பு முகாம்கள் இன்று காலை 10 மணி முதல் மலை 5,45 மணி வரை செயல்படும். இந்த இரண்டு நாட்களில் அனைத்து விண்ணப்பங்களும் பெறப்பட்டு, வாக்காளர் பட்டியலில் தேவையான திருத்தங்களை மேற்கொண்டு வரும் பிப்ரவரி 14 ஆம் தேதி வெளியிடப்படும்.