வாக்காளர்களுக்கு பிரியாணி, பணம்.. உள்ளாட்சித் தேர்தலுக்காக வாக்கு சேகரிக்கும் திமுக பிரமுகர்?!

 

வாக்காளர்களுக்கு பிரியாணி, பணம்.. உள்ளாட்சித் தேர்தலுக்காக வாக்கு சேகரிக்கும் திமுக பிரமுகர்?!

இவரது உறவினருக்குச் சொந்தமான குடோனில் வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பதாகத் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் முடிவடைந்த நிலையில், நாளை தேர்தலில் போட்டியிடப்போகும் வேட்பாளர்களின் பட்டியல் வெளியாகவுள்ளது. பல பகுதிகளில் தேர்தல் பிரச்சாரங்களும் தொடங்கிவிட்டன. தமிழகத்தில் தேர்தல் நடைபெற்றால் வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பது வாடிக்கையான ஒன்று தானே. ஓட்டுக்குப் பணம் வாங்கவும் கூடாது, பணம் கொடுக்கவும் கூடாது என்று தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்தாலும் கூட, கட்சிகளும் மக்களும் அதனைக் கேட்பதாக இல்லை. 

ttn

இந்நிலையில், செட்டி நாயக்கன்பட்டி ஊராட்சி தலைவர் பதவிக்குப் போட்டியிடுவதற்கு திமுக பிரமுகர் சுந்தரவேல் என்பவற்றின் மனைவி வளர்மதி வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளார். இவர்களது உறவினருக்குச் சொந்தமான குடோனில் வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பதாகத் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதனையடுத்து, அப்பகுதியில் அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். ஆனால், அங்கு பணம் ஏதும் சிக்கவில்லை என்றும்  மக்கள் அனைவரும் பிரியாணி மட்டுமே சாப்பிட்டுக் கொண்டிருந்ததாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.