வாகன தொகுப்பிலும் சிக்சர் அடிக்கும் தோனி ! ராணுவ ஜீப் வாங்கி ராஞ்சியில் வலம்வந்தார் !

வாகன தொகுப்பிலும் சிக்சர் அடிக்கும் தோனி ! ராணுவ ஜீப் வாங்கி ராஞ்சியில் வலம்வந்தார் !

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் பழைய வாகனங்களை சேர்த்து வரும் பட்டியலில் தற்போது நிசான் ஜோங்கா வாகனமும் இணைந்துள்ளது.
இந்திய ராணுவத்தில் பயன்படுத்தப்பட்டு பின்னர் ஒதுக்கப்பட்ட நிசான் ஜோங்கா வாகனத்திற்கு பச்சை நிறத்தில் வர்ணம் அடித்து தன்னுடைய பயன்பாட்டிற்காக சில மாற்றங்கள் செய்துள்ளார் தோனி. இது தற்போது ராஞ்சி சாலையில் சென்று அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

வாகனத்தையும், பெயரையும் பார்க்கும்போது நகைச்சுவையாக தெரியும். நிசான் ஜோங்கா 1 டன் வாகனம் சாலையில் செல்வதை காண்பது அரிது.  உண்மையில் இந்தியாவில் மிகவும் அரிதான காட்சியாகும். இந்த வாகனத்தின் பெயர் Jabalpur Ordnance and Guncarriage Assembly (JONGA) என்பதாகும். 

Dhoni car

நிசான் ஜோங்காவின் அரிதான மற்றும் அச்சுறுத்தும் தோற்றம் உண்மையிலேயே பொது சாலைகளில் கண்களைக் கவரும் வாகனமாக ஆக்குகிறது. எம்.எஸ். தோனியை எப்போதும் வாகனங்களின் ரசிகன். அதற்கு எடுத்துக்காட்டு அவரது சேமிப்புகளான Hellcat X132, Kawasaki H2, Ducati 1098, Kawasaki Ninja ZX14R, Harley Davidson Fatboy, and Yamaha YZF600 Thundercat Yamaha RX100s, and RD350s  போன்ற வாகனங்கள்தான். தோனி சமீபத்தில் 1.6 கோடி ரூபாய்க்கு எஸ்.யு.வி. மாடலில் ஒரு ஜீப் வாங்கி உள்ளார். 6.2 லிட்டர் ஹெல்காட் எஞ்சின் மூலம் இயக்கப்படுகிறது, இது 707 பிஹெச்பி மற்றும் 875 என்எம் பீக் டார்க்கை உற்பத்தி செய்கிறது.